“தீ பரவட்டும்” என சொன்னா நடுங்குகிறார்கள்! அண்ணா பெயரை கேட்டாலே சும்மா அதிருதில்ல.. உதயநிதி ஸ்டாலின்
சென்னை: அண்ணா அன்று பற்ற வைத்த அறிவுத் தீ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறது. அதனால் தான் தீ பரவட்டும் என்று சொன்னால் இன்றும் சிலர் பயந்து நடுங்குகிறார்கள் என்று சென்னை புத்தகக் கண்காட்சியில் பபாசி விருதுகளை வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் பபாசி விருதுகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வருஷ வருஷம் நடத்த சொன்னார்
கடந்த நவம்பர் மாதம் வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அறிவுத்திருவிழாவை முன்னிட்டு பல கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்றன. அதன் முக்கிய பகுதியாக ஒரு வார காலம் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
அந்த புத்தகக் கண்காட்சியில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. அதை பார்த்துவிட்டு முதல்வர் சொன்னார். இனிமேல் நீங்கள் வருடா வருடம் புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டும். வருடா வருடம் அறிவுத்திருவிழாவை தமிழகம் முழுக்க நடத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். அந்த அளவுக்கு அறிவுத்திருவிழாவை நாங்கள் சிறப்பாக நடத்தினோம் என்றால் அதற்கு ரோல் மாடலாக இருந்தது சென்னை புத்தகக் கண்காட்சிதான்.
அறிவுச் சமூகமாக தமிழ் சமூகம்
அந்த நன்றியுணர்வோடு இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டுள்ளோம். புத்தகக் கண்காட்சியைப் பற்றி மக்கள் பேசுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் முன்பெல்லாம் விடுமுறை என்றால் சென்னையில் பார்க், பீச், சினிமா தியேட்டர்களில்தான் கூட்டங்கள் கூடும். ஆனால் இன்றைக்கு புத்தகக் கண்காட்சி தொடங்கியது என்றால் மக்கள் குடும்பம் குடும்பமாக புத்தகக் கண்காட்சியை நோக்கி வருகிறார்கள்.
தினம் திருவிழா போல இங்கு கூட்டம் கூடுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள். இன்று இந்தியாவிலேயே முன்னணி அறிவுச் சமூகமாக தமிழ் சமூகம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நம்முடைய தமிழ் மக்கள் என்றைக்குமே வாசிப்பை கைவிடாமல் இருப்பதுதான் முக்கிய காரணம்.
அண்ணா பற்ற வைத்த தீ
நம்முடைய திராவிட இயக்கத்தை எடுத்துக்கொண்டால், பேசியும் படித்தும் எழுதியும் வளர்ந்த இயக்கம் நம்முடைய திராவிட இயக்கம். தந்தை பெரியார் உலகின் போக்கை மாற்றிய கம்யூனிச அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்தார்.
அண்ணா அவர்கள் உலக வரலாற்றுத் தலைவர்களின் கருத்துகளை எல்லாம் தன்னுடைய தம்பிகளுக்கு கடிதமாக எழுதினார்கள். அண்ணா அவர்கள் அன்றைக்கு பற்ற வைத்த தீ, அறிவுத்தீ, இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறது என்றால் மிகையாகாது. தீ பரவட்டும் என்று சொன்னால் இன்றைக்கும் கூட சில பேர் பயந்து நடுங்குகிறார்கள்" இவ்வாறு அவர் பேசினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications