வாகன ஓட்டிகளே.. சென்னையில் இப்படியெல்லாம் இனி போக முடியாது.. உடனே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை அண்ணா சாலை- ஜீ.பி. சாலை, மயிலாப்பூர் சாய் பாபா கோவில் சாலை, டவுட்டன் சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்தினை எளிதாக்குவதற்காக போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுகிறது.சென்னை வாகன ஓட்டிகள் எப்படி மாற்றுவழிகளில் செல்ல வேண்டும் என்பதை பாருங்கள்.
சென்னையில் வாகன பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் வாகன ஓட்டிகள் சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் நிலை தொடர்கிறது.இதற்கு மாற்றுத்தீர்வுகளை உருவாக்க சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் சில முக்கிய சாலைகளில் இன்று மற்றும் நாளை முதல் போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்த உள்ளனர். எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் எப்படி இருக்கும் என்பதை இந்த அறிவிப்பில் பாருங்கள்.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "சென்னை ராயப்பேட்டை ஜீ.பி. சாலையின் இருபுறமும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இந்த சாலையில் இருபுறமும் 4 சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் கடை அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் அதிகப்படியான மக்கள் இந்த சாலைக்கு வருகை புரிகின்றனர். எனவே அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே அண்ணாசாலை - ஜீ.பி. சாலையில் 27-ந்தேதி (நாளை) முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் காட் சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திருப்பி விடப்பட்டு வைட்ஸ் ரோடு சாலை, ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம். மேற்கண்ட வாகனங்கள் ஜீ.பி. சாலை வழியாக அண்ணாசாலை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் ஜீ.பி. சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம்.
ஜீ.பி. சாலை வழியாக அண்ணாசாலைக்கு அனுமதிக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் வலது பக்கம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாக செல்ல தடைசெய்யப்பட்டு, இடது பக்கம் திரும்பி அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் 'யு டர்ன்' செய்து அண்ணாசாலை, டேம்ஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்
அண்ணாசாலை-வாலாஜா சந்திப்பு: அண்ணாசாலை- வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் ஜீ.பி. சாலையில் அனுமதிக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்லலாம்.
அண்ணாசாலை-வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் வாகனங்கள் ஜீ.பி. சாலை சந்திப்பில் 'யு டர்ன்' செய்ய தடைசெய்யப்பட்டு, நேராக அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் 'யு டர்ன்' செய்து அண்ணாசாலை, டேம்ஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.
ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து ஜீ.பி. சாலை நோக்கி வரும் வாகனங்கள் டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை வழியாக சென்று ஜீ.பி. சாலையை அடையலாம்.
மயிலாப்பூர் சாய் பாபா கோவில் சாலை: மயிலாப்பூர் வெங்கடசே அக்ரகாரம் சாலையில் அமைந்து உள்ள சாய்பாபா கோவிலுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று வரும் பக்தர்கள் கூட்டத்தினால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையை கடப்பது மிகவும் சவாலாக உள்ளது. எனவே பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சாலையில் வருகிற 31-ந் தேதி (வியாழன்) முதல் வாரந்தோறும் வியாழக்கிழமை மட்டும் போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.
டவுட்டன் சந்திப்பு : சென்னை வேப்பேரி டவுட்டன் சந்திப்பில் 5 சாலைகள் சந்திப்பதால் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டியும், வாகன ஓட்டிகளின் நன்மை கருதியும் 26-ந்தேதி(இன்று) முதல் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் டவுட்டன் சந்திப்பில் நேராக ரித்தர்டன் சாலைக்கும் மற்றும் வலது புறம் திரும்பி புரசைவாக்கம் நெடுஞ்சாலைக்கும் செல்ல அனுமதியில்லை.
இருசக்கர மற்றும் இலகு ரக வாகனங்கள் டவுட்டன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 15 மீட்டர் தொலைவில் நாராண குரு சாலையில் உள்ள ஆவின் பூத் வழியாக செல்லலாம்.
கனரக வாகனங்கள் டவுட்டன் சந்திப்பில் இடது புறம் திரும்பி நாராயணா குரு சாலை ஈ.வி.கே. சம்பத் சாலை மற்றும் ஜெர்மையா சாலை வழியாக செல்லலாம்.
போக்குவரத்து மாற்றம் தொடர்பாக வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது." இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
-
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது!












Click it and Unblock the Notifications