Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயணிகள் மீது அக்கறையே இல்லை.. தொமுசவிற்கு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணிகளை பற்றி கொஞ்சம் கூட அக்கறை எதுவும் இல்லாமல் முன் அறிவிப்பு இல்லாமல் வழியிலேயே பேருந்தை நிறுத்தியது கடும் கண்டனத்துக்குரியது என்று அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை தெரிவித்துள்ளது.

சென்னையில் வேலைக்கு செல்லும் மக்களும் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் செல்லும் மக்கள் பெரிதும் மாநகர பேருந்தை தான் நம்பியிருக்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கால் வைக்க முடியாத அளவு கூட்டம் அலை மோதும்.

Anna trade union condemns ADMK transport union for sudden strike without caring about passengers

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 1,559 சாதாரண கட்டண பேருந்துகள், 1,304 சொகுசு பேருந்துகள் அதுபோக ஏசி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், மாநகர போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாகவும் உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பேருந்துகளையும் அடுத்த ஆண்டு 500 மின்சார பேருந்துகளையும் வாங்குவதற்கான முயற்சியில் போக்குவரத்துத்துறை உள்ளது.

புதிதாக வாங்கும் பேருந்துகளை அரசு - தனியார் பங்களிப்புடன் இயக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இதற்கு திமுகவின் தொழிற்சங்கமாக தொமுச உள்பட அனைத்து தொழிற்சங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் சிவசங்கர், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதி அளித்தார்.

இந்த நிலையில், போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க அரசு பேருந்து கழகம் முடிவு எடுத்துவிட்டதாக ஊழியர்கள் மத்தியில் தகவல் பரவியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாநகர பேருந்து ஓட்டுநர்கள் திடீரென்று ஆங்காங்கே பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் தவிப்புக்கு உள்ளாகினர்.

பேருந்து நிலையங்களில் பஸ்கள் வராததால் ஆவேசம் அடைந்தனர். பேருந்து நிலையம் கடுமையான கூட்டமாக காட்சி அளித்தது. தொழிற்சங்க பிரச்சினையை பொறுத்தவரையில் முறைப்படி அறிவிப்பு கொடுத்துதான் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் முன் அறிவிப்பு இல்லாமல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தொழிற்சங்க பிரதிநிதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பயணிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கேட்டு கொண்ட பிறகு போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பேருந்தை ஊழியர்கள் இயக்கினர். அதன்பிறகே சென்னையில் பயணிகள் நிம்மதி அடைந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சென்னையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், திமுகவின் தொ.மு.ச. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பயணிகள் சிரமம் அடைந்ததால் அந்த சங்கத்துக்கு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கூறியதாவது:- போக்குவரத்துத் துறையில் தனியார் மயம் முயற்சிக்கு எதிராக அண்ணா தொழிற்சங்கம் ஜனநாயக ரீதியாக பயணிகள் பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த பணியாளர்கள் 500 பேர் பணிக்கு வர இருப்பதாக நினைத்து தொமுச தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் திடீர் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

பயணிகளை பற்றி கொஞ்சம் கூட அக்கறை எதுவும் இல்லாமல் முன் அறிவிப்பு இல்லாமல் வழியிலேயே பேருந்தை நிறுத்தியது கடும் கண்டனத்துக்குரியது. இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா தொழிற்சங்கத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+