யார் அந்த "சார்.." ரொம்ப சந்தேகமா இருக்கு.. அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம்! திருமாவளவன் பரபர
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் "சார்" ஒருவருடன் பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. இதற்கிடையே திமுக கூட்டணிக் கட்சியான விசிக தலைவர் திருமாவளவனும் இதே கருத்தைக் கூறியிருக்கிறார். மேலும், நேர்மையான விசாரணை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் போலீசார் ஞானசேகரன் என்பவனைக் கைது செய்தனர். இதில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றும் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யார் அந்த சார்:
இருப்பினும், இந்த கொடூரம் நடந்த போது ஞானசேகரன் செல்போனில் யாரையோ அழைத்துப் பேசியதாகவும் அதன் பிறகு அந்த சாருடன் இருக்க வேண்டும் என மிரட்டியதாகவும் மாணவி குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது.. இதனால் இந்த சம்பவத்தில் ஒருவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சொல்லி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
திருமாவளவன்:
இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரைத் தாண்டி வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்துள்ளன. பெண்களுக்கான பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதை விசிக அவ்வப்போது சுட்டிக்காட்டியே வருகிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். இருந்த போதிலும் பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு உரியப் பாதுகாப்பை வழங்க வேண்டும். இதற்குத் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சந்தேகம் இருக்கு:
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரைத் தாண்டி வேறு சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் போலீசார் நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அனைவரையும் கைது செய்ய வேண்டும். மேலும், கைது செய்யப்பட்ட நபருக்கும் உடனடியாக ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை சிறையில் வைத்தபடியே விசாரணையை முடித்து தண்டனை வாங்கி தர வேண்டும்" என்றார்.
யார் அந்த 'சார்' என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது குறித்த கேள்விக்கு, "இதுபோல ஒரு சந்தேகம் இருப்பதால்தான் நேர்மையான புலன் விசாரணை தேவை. குற்றம் செய்த யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று அவர் குறிப்பிட்டார். திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவரே இதில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
போலீஸ் விளக்கமும் எதிர்க்கட்சிகள் மறுப்பும்:
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ. அருண் விளக்கமளித்திருந்தார். அதில் ஞானசேகரன் இந்தச் சம்பவம் நடந்த போது செல்போனை ஏரோபிளேன் மோடில் தான் போட்டிருந்தார் என்றும் மாணவியை மிரட்டவே அப்படிச் செய்ததாகவும் கூறினார். இருப்பினும், அதை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள் இதில் உரிய விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications