மாணவர்களுக்கு ஷாக்.. தேர்வுக்கட்டணத்தை 50% வரை உயர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்! பின்னணி இதுதான்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இளநிலை, முதுநிலை மாணவ-மாணவிகளின் தேர்வு கட்டணம் உள்பட 6 வகையான கட்டணங்கள் என்பது திடீரென்று 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை 400க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகிறது.

ஆண்டுதோறும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். தற்போது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், இறுதியாண்டுக்கான ப்ராஜெக்ட் கட்டணம், சான்றிதழ் என்பது தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது திடீரென்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தேர்வுக்கட்டணம், ப்ராஜெக்ட் கட்டணம் உள்பட 6 வகையான கட்டணங்கள் அதிரடியாக 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இளநிலை படிப்பில் ஒரு தாளுக்கான தேர்வு கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்களின் தேர்வுகள் எழுத வேண்டி உள்ளதால் மாணவர்கள் ரூ.2,050 கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதுநிலை படிப்பை பொறுத்தமட்டில் ஒரு தாளுக்கான தேர்வு கட்டணம் என்பது ரூ.450ல் இருந்து ரூ.650 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இளநிலை படிப்புக்கான கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ப்ராஜெக்ட் கட்டணம் என்பது ரூ.300ல் இருந்து ரூ.600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதுநிலை படிப்புக்கான இறுதி ஆண்டு மாணவர்களின் ப்ராஜெக்ட் கட்டணம் என்பது ரூ.600ல் இருந்து 900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் 4 ஆண்டு படிப்பை முடித்த பிறகு சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் என்பது ரூ.1000ல் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு என்பது அடுத்த செமஸ்டர் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளதால் இந்த கட்டணம் அதிகரிப்பால் மாணவர்கள் ஷாக்காகி உள்ளனர். இதனால் இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அண்ண பல்கலைக்கழகம் என்பது வேறு விதமான விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்ட ஆண்டுகளாக பழைய கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் தேர்வுக்கட்டணம் உள்ளிட்டவை திருத்தப்பட்டு புதிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மிகக்குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications