Anna University: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு! 5 மாதங்களில் தீர்ப்பு! நாடே பாராட்டும் நீதிபதி ராஜலட்சுமி!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் 5 மாதங்களில் வேகமாக தீர்ப்பு வழங்கப்பட்ட இந்த வழக்கின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

டிசம்பர் 23, 2024- நாடே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்த போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்
டிசம்பர் 24- மாணவியின் புகாரின் பேரில் பிரியாணிக் கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 28- பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
ஜனவரி 5,2025- ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
பிப்ரவரி 24- 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல்
மார்ச் 7- சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம்
ஏப்ரல் 8- தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய ஞானசேகரன் மனு, குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.
ஏப்ரல் 23 ஆம் தேதி- சாட்சிகளிடம் விசாரணை தொடக்கம்
மே 20- அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதிக்காக காத்திருக்கப்பட்டது.
மே 25- ஞானசேகரன் வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை சிறப்பு மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு
மே 28- ஞானசேகரன் வழக்கில் அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2 அறிவிக்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.
ஜூன் 2- அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி ராஜலட்சுமிக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தையொட்டி பிரியாணி கடை நடத்தி வந்தாராம். இவர் வேலை முடித்து விட்டு இரவு நேரத்தில் பல்கலைக்கழகத்தில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
அவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெண்களை மிரட்டி பணம் பறித்து அதில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications