ஆபாச சைக்கோ..பாலியல் வக்கிரன் ஞானசேகரன்.. செல்போனில் அதிர வைக்கும் வீடியோ!
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே மாணவியின் பெயர் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது பலத்த அதிர் வலைகளை ஏற்படுத்தியது.சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். முன்னதாக ஞானசேகரன் வீட்டில் மேற்கொண்ட ஆய்வில் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் அதிகமாக இருப்பதாகவும், ஆபாச படங்களை பார்த்து ரசித்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் பழக்கம் கொண்டவர் ஞானசேகரன் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் ஒரு காதலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே மாணவியின் பெயர் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது பலத்த அதிக வலைகளை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக் கழகம்:
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதிதுள்ளன. இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மூன்று பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதற்கிடையே ஞானசேகரன் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
எஸ்ஐடி விசாரணை:
இந்த நிலையில் அண்ணா நகர் துணை கமிஷனர் சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஜெய மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யார் அந்த சார் என்பது குறித்து மாணவி பேசியதாகவும், பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
ஞானசேகரின் லேப் டாப்:
இதற்கிடையே கோட்டூர்புரத்தில் ஞானசேகரன் வீட்டிலும் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல்வேறு ஆவணங்கள், லேப்டாப், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஞானசேகரன் செல்போனில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும், லேப்டாப்பிலும் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததால் அது பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தொடர்பில் இருந்தது யார்?:
தொடர்ந்து லேப்டாப்பை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ள அதிகாரிகள் ஞானசேகரன் லேப்டாப்பின் மூலம் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்? யாருக்கெல்லாம் ஆபாச வீடியோக்களை அனுப்பினார்? என்பது குறித்து விசாரணை நடத்த இருக்கின்றனர். மேலும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ஞானசேகரன் தற்போது புகார் அளித்த மாணவி மட்டுமல்லாமல் மேலும் பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் எனவும், ஆபாச படங்களை பார்த்து ரசிப்பதோடு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்து ரசிக்கும் கொடூர மனப்பான்மை கொண்டவர் என கூறப்படுகிறது.
ரகசிய விசாரணை:
ஞானசேகரனின் லேப்டாப்பில், மாணவிகள், குடும்ப பெண்களின் வீடியோக்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை தீவிர படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரன் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஞானசேகர் இடம் தொடர்பில் இருந்த ஒரு நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications