அண்ணா பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின
சென்னை: அண்ணா பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. எனவே, இதனை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

இதனை தொடர்ந்து ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேநேரம், சில முக்கிய தேர்வுகள் மட்டும் மாணவர்களின் எதிர்கால நலனை முன்னிட்டு நடத்தப்பட்டன. அப்படித்தான், அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.
2020ம் ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டுக்கான ஏப்ரல், மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
ரிசல்ட்களை வெப்சைட்டில், அண்ணா பல்கலைக்கழக, மாணவ மாணவியர் காலை முதல் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
தேர்வு முடிவுகளை, https://auexams2.annauniv.edu/result/index.php மற்றும் https://auexams3.annauniv.edu/result/index.php ஆகிய வெப்சைட்களில் பார்க்கலாம். பல மாணவர்களும் ஒரே நேரத்தில், ரிசல்ட் பார்க்க முற்பட்டதால், இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. எனவே சிறிது நேரம் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவருமே தேர்ச்சி பெற்றிருப்பதால் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்று தேர்வுகள் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications