அண்ணாமலையிடம் விசாரணை? அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஹைகோர்ட்டில் மனு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம்பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் பிரியாணி கடை நடத்தி வரும் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இவர் அண்ணா பல்கலை வளாகத்திற்குள் அத்துமீறி சென்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.
ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மே 28ம் தேதி ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது
அதன்பிறகு அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை உள்ளிட்ட 11 குற்றங்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இடை இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக, பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுகவை கடுமையான விமர்சனம் செய்தன. மேலும் ஆளும் கட்சி பிரமுகருடன் குற்றவாளி ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறினர். மேலும் யார் அந்த சார்? என்பது டிரெண்ட் ஆக ஆரம்பித்தது.
இதற்கிடையே தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எம்எல் ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‛‛குற்றவாளி ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால் அதுபற்றி விவரங்கள், தொலைபேசி உரையாடல்களை அண்ணாமலை சிறப்பு விசாரணை குழுவிடம் வழங்கவில்லை. இதனால் அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ்












Click it and Unblock the Notifications