Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செமஸ்டர் தேர்வு முடிவுகள்.. சில கல்லூரி முடிவுகளை அதிரடியாக நிறுத்திய அண்ணா பல்கலை.. என்னாச்சு?

சில பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஜினியரிங் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சில கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு 16 இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் அச்சமும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு முடிவுகள்

செமஸ்டர் தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 441 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்துகிறது. இதனிடையே, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 3, 5 மற்றும் 7-வது செமஸ்டர் தேர்வுகள் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இதற்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு

தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு

இந்நிலையில், சில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் இதில் வெளியாகாமல் இருந்தது. இதனால் அந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுதொடர்பாக தங்கள் கல்லூரி நிர்வாகங்களை தொடர்புகொண்டு கேட்டபோது, தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இது, மாணவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

 மாணவர்கள் கேள்வி

மாணவர்கள் கேள்வி

இதுகுறித்து விசாரித்த போது, விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்துகொள்ளாத கல்லூரிகள், விடைத்தாள் திருத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் நிதி தொடர்பான கணக்குகளை ஒப்படைக்காத கல்லூரிகள், தேர்வுக்கட்டணத்தை உரிய முறையில் செலுத்தாத கல்லூரிகள் ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இதனால் விரக்தி அடைந்துள்ள மாண்வர்கள், கல்லூரிகள் செய்த பிழைக்காக எங்களை தண்டிப்பதா என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

அண்ணா பல்கலை. விளக்கம்

அண்ணா பல்கலை. விளக்கம்

இந்நிலையில், இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு உயரதிகாரிகள் கூறுகையில், "விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக சில கல்லூரிகள் ஆசிரியர்களை நியமனம் செய்வது கிடையாது. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படுகிறது. இது, மாணவர்களையும் பாதிக்கிறது. எனவே, அனைத்து கல்லூரிகளும் விடைத்தாள் திருத்துவதற்காக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே தற்போது 16 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்காக வழங்கப்பட்ட நிதி குறித்த கணக்கு வழக்குகளையும் சில கல்லூரிகள் ஒப்படைக்கவில்லை. இது, கணக்கு தணிக்கையில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரிகள் விளக்கம் அளித்தவுடன், தேர்வு முடிவு வெளியிடப்படும்" என அவர்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+