80 பொறியியல் கல்லூரிகளுக்கு ‘செக்’.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவு! மாணவர்களுக்கு பெரிய சிக்கல்?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளில் உள்ள மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு அங்கீகாரத்தை தொடர்ந்து புதுப்பித்தால் மட்டுமே பொறியியல் கல்லூரிகள் அந்த ஆண்டில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள முடியும். இந்நிலையில், 80 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
80 பொறியியல் கல்லூரிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை, தகுந்த எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லை, உரிய ஆய்வகங்கள் இல்லை என்ற காரணங்களால் அண்ணா பல்கலைக்கழகம், அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
80 பொறியியல் கல்லூரிகளையும் நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழக குழுவினர் விரைவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். உட்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.
ஆய்வின்போது சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை சரி செய்யாமல் உள்ள கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது. அங்கு படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அரசு கல்லூரிகளுக்கோ, பிற தனியார் கல்லூரிகளுக்கோ மாற்றவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications