'வேதாளத்தை ஊத்தி, வீரத்தை தெளிச்சி, விவேகம் விஸ்வாசத்த தூவி, இப்படி ஒரு பொறட்டு அப்படி ஒரு பொறட்டு'
சென்னை: வேதாளத்தை ஊத்தி வீரத்தை மேல தெளிச்சி.. விவேகம் விஸ்வாசத்த தூவி.. இப்டி ஒரு பொறட்டு அப்டி ஒரு பொறட்டு.. அண்ணாத்த ரெடி... இந்த விமர்சனம் ட்விட்டரில் வந்தது. இப்படித்தான் ட்விட்டரில் பலரும் அண்ணாத்தே படத்தின் ட்ரெய்லரை விமர்சிக்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி அன்று (நவம்பர் 4) திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு, பாண்டியராஜன், லிவிங்கஸ்டன், வேலராமமூர்த்தி என ஒரு தயாராகி உள்ள படம் அண்ணாத்த.
சிறுத்தை சிவா இயக்கிய படங்கள் எல்லாம் ஒரு சென்டிமெண்ட் இருக்கும். ஒன்று அண்ணன் தங்கச்சி சென்டிமெண்ட், இல்லாவிட்டால் அப்பா, மகள் சென்டிமெண்ட் இருக்கும், இல்லாவிட்டால் அண்ணன் தம்பி சென்டிமண்ட் இருக்கும். அத்துடன் ஊருக்குள் பெரிய ஆள் இருப்பார்.அவரை ஹீரோ எதிர்ப்பார்- கடைசியில் மொரட்டு வில்லன்களின் சோலியை முடிப்பார்.

கதை விறுவிறுப்பு
ரத்த களறியாக காட்சிகள் இருக்கும். இந்த காட்சிகள் எல்லாம் பல படங்களில் வந்தவை தான் என்றாலும், ரசிக்கும் படியாக திரைக்கதை அமைதிருப்பார். விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்கு கதை விறுவிறுப்பாக பொழுதுபோக்காக இருக்கும். அஜித்தை வைத்துதான் இவரது படங்கள் எல்லாம் பெரும்பாலும் இருந்தது.

வசூல் சாதனை
அஜித்தை வைத்து இவர் எடுத்த வேதாளம், வீரம், விஸ்வாசம் , (விவேகம் தவிர) மூன்றுமே வசூலில் சாதனை படைத்தவை. பெரும் வரவேற்பை பெற்றவை. குறிப்பாக கடைசியாக எடுத்த விஸ்வாசம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. தமிழகத்தில் குடும்பம் குடும்பமாக விஸ்வாசத்தை பார்த்தார்கள்.

அண்ணாத்த எப்படி
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து முந்தைய படங்களின் கூட்டுக்கலவையாக அண்ணாத்த படத்தை உருவாக்கி இருப்பது ட்ரெய்லரிலேயே இருக்கும். மற்ற படங்களில் இல்லாத ஒரு காட்சி அமைப்பு என்றால் ரஜினியை ஊராட்சி மன்ற தலைவராக காட்டியிருப்பது தான். முதல்வராக, அமைச்சராக ஒரு படத்தில் கூட நடிக்காத ரஜினி, முதல்முறையாக ஊராட்சி மன்ற தலைவராக நடித்திருப்பது இந்த படத்தில் தான். அவருக்கு அரசியல்வாதிகளால் ஏற்படும் பிரச்சனைகள், குடும்பங்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதை எப்படி ரஜினிகாந்த் சமாளிக்கிறார் என்பதாக உள்ளது.

விமர்சனங்கள்
வழக்கம் போல் வில்லனாக பிரகாஷ் ராஜ் என்ட்ரி கொடுக்கிறார். மீனா, குஷ்புக்கு ரஜினி மாமா உறவு முறையாம். நயன்தாரா ஹீரோயின், தங்கையாக கீர்த்தி சுரேஷ், காமெடிக்கு சூரி, சதீஷ், ரெடின் கிங்க்லி இருக்கிறார்கள். சிரிக்க வைப்பார்கள் என்று நம்புவோம். இந்த படம் வேதாளத்தை ஊத்தி வீரத்தை மேல தெளிச்சி.. விவேகம் விஸ்வாசத்த தூவி.. இப்டி ஒரு பொறட்டு அப்டி ஒரு பொறட்டு.. அண்ணாத்த ரெடி.. என்ற ரீதியில் இருப்பதாக விமர்சனங்கள் இருக்கின்றன. அரைத்த மாவையே சிவா அரைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் டுவிட்டரில் அதிகமாக உள்ளது. ஆனால் விமர்சனங்கள் எல்லாவற்றையும் ரஜினியின் நடிப்பும் ஸ்டைலும் காலி செய்யும் என்பது ரசிகர்கள் நம்பிக்கை.

அணுகுண்டு
மிகப்பெரிய உச்ச நடிகர் ரஜினிகாந்த், அவரது படம் பேமிலியாக பார்க்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று சிவா மெனக்கெட்டிருப்பது ட்ரெய்லரில் தெரிகிறது. ரஜினியும் அற்புதமாக தனது பங்கை செய்து உள்ளார். ஆனால் விஸ்வாசத்தில் உள்ளது போல் ஒரு மெலடி, வீரம் பாணியில் ஒரு தீம் சாங்க், வேதாளம் பாணியில் காட்சிகள், அதே வில்லன், அதே கிராமத்து பாடல்கள் என என கலவையாக வந்திருப்பது உண்மை தான். படம் எப்படி இருக்கிறது என்பதை ட்ரெய்லரை வைத்து முடிவு செய்யக்கூடாது என்பதால் நேரில் பார்த்து தெரிந்து கொள்வோம். தீபாவளிக்கு அண்ணாத்தவை வைத்து சிவா வெடிக்கப்போவது, அணுகுண்டா, சீனிவெடியா என்பது நவம்பர் 4ம் தேதி தெரிந்துவிடும். ரஜினி மேஜிக் இருப்பதால் எல்லாம் சிறப்பாக வரும் என்று நம்புவோம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications