மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்!
சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடனான ஆலோசனையின் போது கோவையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்கினால் மட்டுமே போட்டியிடுவேன் என்று அண்ணாமலை தெளிவாக கூறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று முடிவை மறுபரிசீலனை செய்ய பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு அறிவுறுத்திய நிலையில், மொடக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்றும் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. பாஜக சார்பாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சில வாரங்களுக்கு முன்பே அண்ணாமலை கடிதம் அனுப்பி இருந்தார். அதேபோல் பிஎல் சந்தோஷ் முன்னிலையிலேயே வெறும் ஒரு மாதத்தில் ஒரு தொகுதியில் பணியாற்றி எப்படி வெல்ல முடியும் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இருந்தாலும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று பாஜக மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார். அப்போது புதுச்சேரியில் பிரச்சாரத்தில் இருந்த அண்ணாமலை, அவசரமாக அழைக்கப்பட்டார்.
இதனால் ஹெலிகாப்ட்டரில் சென்னை வந்த அண்ணாமலை, பாஜகவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பாஜக மேலிடம் சொன்ன தகவலை பியூஷ் கோயல் பகிர்ந்திருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதன்பின் அண்ணாமலை தரப்பில் கோவை தொகுதிக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுகிறேன் என்று கூறி இருக்கிறார். ஆனால் கோவையில் பாஜகவுக்கு ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், அந்த தொகுதியில் போட்டியிட வானதி சீனிவாசன் ஆயத்தமாகி வருகிறார்.
இதனால் மொடக்குறிச்சி, ராமநாதபுரம் அல்லது திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதியில் போட்டியிட முடியுமா என்று கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறிவிட்டதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதன் மூலமாக அண்ணாமலை இம்முறை தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறும் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன் என்பதில் கவனமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்?












Click it and Unblock the Notifications