5 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள்.. அத்தனை ‘பிஸி’க்கு நடுவே அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை : கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் பிஸியாக இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 5 மாவட்டங்களுக்கு புதிதாக பார்வையாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் இருந்தபடியே, தமிழ்நாட்டின் தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, ராமநாதபுரம், செங்கல்பட்டு தெற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமித்துள்ளார் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

ராமநாதபுரம் மாவட்ட பார்வையாளராக கே.முரளிதரன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பார்வையாளராக எம்.ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பார்வையாளராக கே.வெங்கடேசன், சேலம் மேற்கு பார்வையாளராக ஆர்.ரகே.வரதராஜன், தருமபுரி மாவட்ட பார்வையாளராக கே.முனியராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்ற விழாக்கள் மற்றும் அவரை வரவேற்கும் - வழியனுப்பும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இன்றும் தமிழ்நாட்டில் பிரதமர் மோடியை அண்ணாமலை சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிக்காக டெல்லி சென்றார் அண்ணாமலை. அங்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் கடந்த 2 நாட்களாக இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடக மாநில பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகா தேர்தல் பணிகள் காரணமாகவே பிரதமர் மோடி வருகையின்போதும் அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு வரவில்லை.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications