அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா செய்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குள்ளாக அவர் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்வதாக டெல்லியில் கடிதம் கொடுத்துள்ளார். விரைவில் அண்ணாமலை புதிய கட்சியை தொடங்கவுள்ளார். பான் இந்தியா அரசியல் வாதியாக இருந்த அண்ணாமலை பாஜகவில் வெளியேறியிருப்பது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 வருடங்களாக அண்ணாமலையின் செயல்பாடுகளில் அதிருப்தியாக பாஜக தலைமை அவருக்கான கதவுகளை எப்போதோ அடைத்துவிட்டதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தமிழக பாஜக நிர்வாகிகள் கூறுகையில், "அண்ணாமலை கடந்த 2020 தமிழக பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே பாஜக மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார். அதிரடி அரசியல் பார்முலாவை கையில் எடுத்து ப்ரஸ் மீட்களில் அதிரி புதிரி கருத்துகளை சொல்லி கவனம் ஈர்த்தார். 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்த சில மாதங்களில் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலையின் சர்ச்சை பக்கங்கள்
அவரை சிங்கம், தீரன் என்று கொண்டாடினோம். தமிழக பாஜகவை சொந்த காலில் நிறுத்தி வளர்க்க நினைத்தார். அவரின் எண்ணம் மிகச்சரியானது. ஆனால் அதற்கான அஸ்திவாரத்தை அவர் போடவில்லை. எல்.முருகன் மாநில தலைவராக இருந்தபோது கூட பாஜகவை களத்தில் ஆழமாக கால் பதிக்கும் வேலைகள் தீவிரமாக நடந்தன. அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது அவரின் பேச்சிற்கும், செயலுக்கும் பயங்கர வித்தியாசம் இருந்தது.
பாஜகவுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த கட்டடைப்பும் காணாமல் போனது. தன்னை புகழ்ந்து வரவேற்பவர்களுக்கு மட்டும் தான் மாநில மற்றும் மாவட்ட அளவில் அண்ணாமலை பதவி கொடுத்தார். முருகன், வானதி, நயினார் நாகேந்திரன் என்று சக சீனியர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு பகையை வளர்த்தார். ஹனி டிராப் விவகாரம் பாஜகவை சுழன்றடித்தது. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடனும் பனிப்போரில் ஈடுபட்டார். 2021 தேர்தலில் அதிமுக தயவில் தான் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்தனர்.
அடுத்தடுத்து தோல்விகள்
நாளடைவில் அதிமுகவையே அண்ணாமலை கடுமையாக விமர்சித்து அதிமுக - பாஜக கூட்டணி உடைய காரணமாக இருந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டுது. தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. மேலே பாஜகவுக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தால் 5-10 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க முடியும். அண்ணாமலையை நம்பி மோசம் போய்விட்டோம் என்று அண்ணாமலை மீது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா கோபமடைந்தனர்.
கவுன்சிலர் பதவியில் கூட இல்லாமல் ரபேல் வாட்ச், தோட்டம், ரியல் எஸ்டேட் பிசினஸ் என்று அண்ணாமலையின் பொருளாதாரம் சரசரவென எகிறியது. பாஜகவின் நிலை பாப்பம்பட்டி அணி போல பரிதாபமாக மாறியது. தொழிலுக்காக அவர் திமுகவுடன் அண்டர் டீலிங் போட்டதாக விமர்சனம் புகார்கள் எழுந்தன. அடுத்தடுத்த விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் சாட்டையால் தன்னை தானே அடித்து கொள்வது, செருப்பு போட மாட்டேன் என அண்ணாமலையின் அடுத்தடுத்து எடுத்த அரசியல் முடிவுகள் மீம்ஸ் மெட்டீரியலாக மாறியது.
டெல்லியின் பிரேக்கப்
இனியும் அண்ணாமலையை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று தான் அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கியடித்து, நயினாரை அந்த இடத்தில் அமரவைத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தனர். தனக்கு தேசியளவில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அண்ணாமலை மிகுந்த ஆர்வத்தில் இருந்தார். தனிமனித துதிபாடல் அரசியல் நம் கட்சிக்கு பொருந்தாது என மோடியும், அமித்ஷாவும் அவரை எப்போதோ புறக்கணிக்க தொடங்கிவிட்டனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடி மற்றும் அமித்ஷாவை தனியாக சந்திக்க அண்ணாமலை முயன்றும் அப்பாய்ன்மென்ட் கிடைக்கவில்லை. பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தான் அவரை சமாதானப்படுத்தி வைத்திருந்தார். ஒருகட்டத்தில் அவரும் அண்ணாமலையின் செயல்பாடுகளில் அதிருப்தியானார். பாஜக தன்னை புறக்கணிப்பது வெளியில் தெரிவதற்குள், தான் பாஜகவை புறக்கணிக்கிறேன் என்பது தான் ஹைலைட்டாக வேண்டும் என்பதற்காக அவ்வப்போது முக்கிய நிகழ்வுகளை புறக்கணித்தார்.
வெளியேற்றம் பின்னணி
இதையெல்லாம் உணர்ந்து தான் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றபோது கட்சியும் வற்புறுத்தாமல் ஒதுங்கிவிட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இருக்காது என கூறினார். ஆனால் அந்த தேர்தலுக்கு பிறகு காணாமல் போனது அண்ணாமலை தான். பாஜக தலைமை அவரை எப்போதை கைக்கழுவிவிட்டது. தனக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன என்பதால் அவர் வெளியேறியுள்ளார்" என்றனர்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்










Click it and Unblock the Notifications