Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக - கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பதற்கான நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. பிரதமர் உட்பட 10 மத்திய அமைச்சர்கள், 6 மாநில முதல்வர்கள், 21 மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் அண்ணாமலையின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை.

Annamalai

அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களின் பெயர்களும் கூட இடம்பெறவில்லை. இதுகுறித்து அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார். இருந்தாலும் தமிழக பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன் என்றும், பிரச்சாரம் மேற்கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக தேர்தலுக்கான நட்சத்திர பரப்புரையாளர்களின் பெயர்கள் பாஜகவால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்காக வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர்கள் மற்றும் இணையமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, நிர்மலா சீதாரமன், பியூஷ் கோயல், கிஷன் ரெட்டி, எல்.முருகன், சுரேஷ் கோபி, அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹல் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் மாநில முதல்வர்களான யோகி ஆதித்யநாத், மோகன் யாதவ், தேவேந்திர பட்னாவிஸ், பஜன்லால் சர்மா, ஹிமாந்த் பிஸ்வ சர்மா, ரேகா குப்தா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, தேஜஸ்வி சூர்யா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், எச்.ராஜா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து வானதி சீனிவாசன், சரத் குமார், விபி துரைசாமி, குஷ்பு சுந்தர், புரட்சி கவிதாசன், சயத் இப்ராஹிம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நடிகை நமிதா, ஆர்.செந்தில், கஸ்தூர் சங்கர், மதுவந்தி, ரவிச்சந்திரன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இதில் ராதிகா, வினோஜ் பி செல்வம், கேடி ராகவன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+