முதல்வர் கனவு.. தண்ணி தெளிங்க! அண்ணாமலையை கட்டம் கட்டிய எஸ்வி சேகர்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சராகும் கனவில் இருப்பதாகவும், தண்ணீர் தெளித்துவிட்டால் கனவு தெளிந்துவிடும் என்றும் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒன்பது இடங்களை பாஜக டார்கெட் செய்திருக்கிறது. இதற்கேற்ப கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் கூறிவரும் கருத்துக்கள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியலுக்கு அண்ணாமலை செட் ஆக மாட்டார் என்றும், அவரால் தமிழ்நாட்டில் பாஜக வளராது எனவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் அண்ணாமலை முதலமைச்சராகும் கனவில் இருப்பதாகவும், தண்ணீர் தெளித்துவிட்டால் கனவு தெளிந்துவிடும் என்றும் விமர்சித்துள்ளார். இன்று சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட் கிளப் அரங்கில் 'தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எஸ்.வி.சேகர்,
"நான் பிரதமர் மோடி அவர்களால் உந்தப்பட்டு பாரதிய ஜனதாவில் உறுப்பினராக இருக்கிறேன். ஆனால் அண்ணாமலை தலையில் இருக்கக்கூடிய தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் எந்த ஒரு செயல்பாடும் எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அண்ணாமலை, கட்சி தலைமையையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். 2024 தேர்தல் முடிவு வெளிவரும் போது அண்ணாமலை இங்கிருந்து தூக்கி அடிப்படுவார். அப்போதுதான் நான் சொல்வது புரியும்.
பாஜகவில் ஒரு சதவீதம் கூட பிராமணர்கள் இருக்கக் கூடாது என்று முடிவுடன் செயல்பட்டுக் அவர் கொண்டிருக்கிறார். எனவே அவரை எப்படி எனக்கு பிடிக்கும்? எத்தனையோ தொகுதியில் இருந்து பிராமணர்களை நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். EWS 10% இட ஒதுக்கீடு எம்ஜிஆரின் கனவு அதை நிஜமாக்கியவர் பிரதமர் மோடி.
ஆனால், தமிழ்நாட்டில் அண்ணாமலை செய்து வரும் அரசியல் அனைத்தும் பூஜ்ஜியத்துக்கு வழிகாட்டக் கூடியது. இப்படி பேசுவதால் மோடி பிரதமராக வரமாட்டார் என்று நினைக்க வேண்டாம். 2024ல் முழு பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் மோடி அமர்வார். ஆனால் தமிழ்நாட்டின் அண்ணாமலையின் தலைமையில் இந்த வெற்றிக்கான பங்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். ஏனெனில் அண்ணாமலை தலைமையில் ஒரே ஒரு சீட்டு கூட பாஜக தமிழ்நாட்டில் ஜெயிக்காது.
திமுகவுக்கு அதிமுகவுக்கும் பெரும்பான்மையான வாக்கு வங்கிகள் இங்கு இருக்கிறது. பாரதிய ஜனதாவுக்கு வெறும் மூன்று சதவீதம் மட்டுமே வாக்குகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால் இந்த வாங்கு வங்கி 15 சதவீதமாக வளர்ச்சி அடைந்து விட்டது என்று அண்ணாமலை கூறுகிறார். அவருக்கு மட்டும் எப்படி ஏலியன் வழியாக வாக்குகள் வருமா? மூன்று சதவீத வாக்குகள் 13 சதவீதமாக உயர வேண்டும் எனில் திமுகவிலிருந்து 10% வாக்காளர்கள் பாஜகவுக்கு வர வேண்டும். இல்லையெனில் அதிமுகவில் இருந்து 10% வாக்காளர்கள் இங்கு வரவேண்டும்.
ஆனால் அப்படி வந்திருக்கிறார்களா? என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இதற்காகத்தான் நாம் கூட்டணி அமைத்தோம். திமுக கூட்டணி விசயத்தில் மிகவும் உறுதியாக இருக்கும். அதிமுகவும் கூட்டணி விஷயத்தில் உறுதியாக இருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதமே அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்கிற முடிவை அண்ணாமலை எடுத்துவிட்டார். ஏனெனில் கொங்கு மண்டலத்தில் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தனக்கு போட்டியாக இபிஎஸ் போன்றவர்கள் இருக்கக் கூடாது என்பதை அண்ணாமலை தீர்மானித்தார்" என்று விமர்சித்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications