அமித்ஷா வருகைக்கு என்ன காரணம்? பாஜக மாநில தலைவர் மாற்றம் உறுதியா? அண்ணாமலை சொன்ன தகவல்!
சென்னை: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்கான காரணத்தை நாளை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம்; மாநிலத் தலைவர் நியமனத்திற்கும், அமித்ஷா வருகைக்கும் தொடர்பில்லை, கட்சியின் மாநிலத் தலைவர்களை அமித் ஷா சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று இரவு சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து இன்று இரவு 10:20 மணியளவில், தனி விமானத்தில் சென்னை வரும் அமித்ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் மாலை வரை, தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சில முக்கிய தலைவர்களையும் அமித் ஷா சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில், அமித்ஷா ஆர்வமாக உள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமியுடன் உறுதியாக சந்திப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. மாநிலத் தலைவர் போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை கூறி இருந்தார்.
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரில் ஒருவர் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. தமிழக பாஜகவின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மத்திய உள்துறை அமித் ஷாவின் தமிழக வருகையின்போது புதிய மாநிலத் தலைவர் அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு வருவது உறுதி, நாளை மாலை வரை தமிழ்நாட்டில் இருப்பது உறுதி. அவர் எதற்கு வருகிறார் என்பதையெல்லாம் நாளை அதிகாரப்பூர்வமாக சொல்கிறோம். மாநில தலைவர் நியமனத்துக்கும் அமித் ஷா வருகைக்கும் சம்பந்தம் இல்லை. 4 நாட்களுக்கு முன்பு அமித் ஷா பீகார் சென்றார். அங்கு அரசியல் தலைவர்களை சந்தித்தார். தமிழகத்திலும் அதுபோன்ற பயணமாகவே வருகிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
அவினாசி எல்.முருகன், சாத்தூர் நயினார், பல்லடம் அண்ணாமலை.. கமலாலயத்தில் ரெடியான பாஜக வேட்பாளர் லிஸ்ட் -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
சல்லி சல்லியா போகுதே என்டிஏ ஆசை.. டிடிவி தினகரன், அன்புமணி கறாரால் அதிரும் பாஜக! அமித்ஷா முடிவு என்ன -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா? அதனால நாங்கள் டெல்லிக்கு போறோம்! என்ன தவறு? தினகரன் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா












Click it and Unblock the Notifications