இதுதான் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையா? மீஞ்சூர் சலீம் கைதால் கொதித்துப்போன அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை சேர்ந்த மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி, வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி மீஞ்சூர் முகமது சலீம் முபாரக் அலி கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீமை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டுள்ளதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார்.

Annamalai condemns tamil nadu police for arresting minjur saleem

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திமுகவின் இரட்டை வேடத்தையும், பிரிவினைவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த சகோதரர் மீஞ்சூர் சலீம் அவர்களை, பெங்களூர் விமான நிலையம் வரை சென்று கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை. அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் தரங்கெட்ட திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

போதைப் பொருள்கள் விற்பவர்களுக்கும், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், கட்சிப் பதவி கொடுத்து அழகு பார்க்கும் திமுக, சமூக வலைத்தளங்களில் திமுகவை விமர்சிப்பவர்களை மட்டும், வெளி மாநிலங்களுக்குக் கூட, தேடிச் சென்று கைது செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழக காவல்துறை, திமுக ஆட்சியில், சமூக விரோதிகளை எல்லாம் விட்டுவிட்டு, சமூக வலைதளங்களின் குரலை முடக்க மட்டுமே பயன்படுத்தப்படுவது, வருத்தத்திற்குரியதும், காவல்துறையின் மாண்பை களங்கப்படுத்துவதும் ஆகும். காவல்துறையை, தங்கள் ஏவல்துறையாகப் பயன்படுத்தும் போக்கை, திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+