75 ஆண்டு ஆச்சு! பாஜகவை பார்த்து பயம்! திமுகவுக்கு அழிவு நெருங்கிடுச்சி! இனி தொடரும்! அண்ணாமலை ட்வீட்
சென்னை: தமிழகத்தில் பாஜக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி தர மறுத்தது திமுக அரசின் அதிகார அத்துமீறல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற
தமிழக பாஜக தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் தமிழக பாஜக பின்வாங்கப் போவதில்லை.
1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும். இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற @BJP4Tamilnadu தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) November 1, 2023
மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக… pic.twitter.com/TCdODqlGn3
சென்னை பனையூரில் அண்ணாமலையின் வீட்டருகே 45 அடி உயர பாஜக கொடி கம்பம் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக கூறி போலீஸார் அதை மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் போலீஸார் அவர்களை கைது செய்து அன்று இரவே விடுதலை செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த அண்ணாமலை, நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 கொடிகள் வீதம் 10 ஆயிரம் கொடி கம்பங்கள் தமிழகத்தில் நடப்படும் என்றார். அந்த வகையில் இன்று தமிழகத்தில் பாஜகவினர் புதிய கொடி கம்பம் நட போலீஸார் அனுமதி மறுத்தனர். மாநகராட்சியின் அனுமதி இல்லாததால் கொடி கம்பம் நட அனுமதி மறுத்ததாக தெரிவித்தனர். மேலும் அனுமதியின்றி நட்டு வைத்தால் மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications