கோவையில் அண்ணாமலை, தென் சென்னை தமிழிசை, நெல்லை நயினார்.. வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
சென்னை: தமிழ்நாட்டிற்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், தனியாக கூட்டணியை கட்டமைத்துள்ளது பாஜக. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திவிரப்படுத்தி வந்தது பாஜக. அதன்படி, அண்மையில், பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, சீட் ஷேரிங் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வது குறித்து உயர்மட்ட குழு கூட்டம் நேற்று கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
அப்போது, புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் போடப்பட்டது. தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், ஆலோசனை நடத்தி, அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் போடப்பட்டது.
மேலும், ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், பாரிவேந்தர் பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக் கட்சி (ஐஜேகே), தேவநாதன் யாதவ் நடத்தி வரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம், ஜி.கே.வாசனின் தமாகா ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஓபிஎஸ் இன்று தனது அணியினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஆனால், அதன்பிறகு எதையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. 20 தொகுதிகளில் பாஜக நேரடியாகப் போட்டியிடுகிறது. 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
பாஜக வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை முதல் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கலாம். பாஜகவின் தேசிய தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்கள். பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை விரைவில் இன்றைக்கே அறிவிப்போம்." என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிலையில், பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்:
தென்சென்னை - தமிழிசை சௌந்தரராஜன்
மத்திய சென்னை - வினோஜ் பி செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலை, தான் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பலமுறை கூறி இருந்த நிலையில், அண்ணாமலை கோவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications