அண்ணாமலை இல்லை.. சார்ஜ் எடுத்த கேசவ விநாயகம்.. கூட்டணி யாருடன்? வி.பி துரைசாமி சூசகம்
சென்னை: அண்ணாமலை தலைமையில் நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பாஜக உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் கமலாலயத்தில் கேசவ விநாயகம் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக துணைத்தலைவர் வி.பி. துரைசாமி, அதிமுக உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆவார் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறி வருகின்றனர் பாஜகவினர். இதற்காக தங்கள் கூட்டணியில் உள்ள கட்சியினரை தக்க வைக்க போராடி வருகிறது டெல்லி தலைமை.

பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக கூடி பாஜகவிற்கு எதிராக வியூகம் வகுத்து வருகின்றன. இந்த நிலையின்தான் தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டது அதிமுக.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும் என பதில் அளித்திருந்தார். இந்நிலையில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு இடையில் பாஜக தலைமையிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படும் நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்கள், அதிமுக உடனான கூட்டணி முறிவு மற்றும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது. அதே போல மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார் அண்ணாமலை.
இந்நிலையில், இன்றைய தினம் அக்டோபர் 3ஆம் தேதி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெற இருந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் தி. நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர், பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி, அதிமுக பாஜக இடையேயான கூட்டணி நீடிக்கும் என்று கூறியுள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வி.பி துரைசாமி, கூட்டணி நீடிப்பதற்காகவே பெரியவர்கள் பேசி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். நீங்க சந்தோஷப்படுவது போலவே நடைபெறும் என்றும் கூறினார் வி.பி. துரைசாமி.
அதே நேரத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியோ, அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு தேவையான நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்று கூறினார். அடுத்த கட்ட நடவடிக்கைப் பற்றி தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும் என்றும் மேலிட இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார். இதனிடையே பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் வரும் 5ம் தேதி அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications