சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி தகவல்.. போலி சமூக நீதி நாடகமாடும் திமுக.. பாஜக அண்ணாமலை விமர்சனம்
சென்னை: ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகளை ஏற்படுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் இல்லை என்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும், 22 அரசு மற்றும் 50 அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் தனியாரால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள் கூட இல்லை என்பதை தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.
மேலும், மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்கான அரசுப் பள்ளிகளில், காலியாக இருக்கும் 38% அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப, கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதையும், தமிழகம் முழுமைக்குமான மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநிலக் கொள்கை இல்லாததையும் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கைகள் உருவாக்குவது குறித்து, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்ட மாநில ஆலோசனைக் குழு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே கூடியிருப்பதாக, தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், போலி சமூக நீதி நாடகமாடி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. உடனடியாக, காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்காக, குறைந்தது ஒரு சிறப்புப் பள்ளி வீதம் திறக்க திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?












Click it and Unblock the Notifications