Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேல் யாத்திரைக்கு 4.. தமிழிசைக்கு 2.. ஆனால் அண்ணாமலையின் என் மண் யாத்திரைக்கு "ஜீரோ".. பாஜக ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வென்ற நிலையில் மிகப்பெரிய மாநிலமான தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ இடங்களில் வீழ்ந்து உள்ளது.

டேய் இவன் போற இடமெல்லாம் கேட் போடுடா என்று காமெடி ஒன்றில் வடிவேலு சொல்லுவார்.. அதுதான் பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கையில் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்த அந்த கட்சி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது என்பதுதான் உண்மை. இப்போது தேர்தல் அரசியலிலும் அண்ணாமலை கடுமையான தோல்வியை சந்தித்து உள்ளது.

Lok Sabha Election 2024 annamalai

அதற்கு பாஜக தமிழ்நாட்டில் வலிமை இல்லாமல் இருந்தாலும் கட்சி மீது பெரிதாக விமர்சனங்கள் இருக்காது. அமைதியான மிடில் பென்ச் ஸ்டூண்ட் போலத்தான் பாஜக இருந்து கொண்டு இருந்தது. ஆனால் தமிழக பாஜக கடந்த 2 வருடங்களில் பல இடங்களில் வளர்ந்துவிட்டதாக அண்ணாமலை தொடர்ந்து கூறி வந்தார். அப்படி இருக்க அண்ணாமலை மீது இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பாஜகவை தூக்கி நிறுத்திவிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சவால் விட்ட அண்ணாமலை: மதுரையில் லோக்சபா பிரச்சாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அவர் தனது பிரச்சாரத்தில் ஐயா இன்னைக்கு நான் சொல்றேன். குறிச்சி வச்சுக்கோங்க. நானும் எங்கேயும் செல்ல மாட்டேன். நீங்களும் எங்கேயும் செல்ல மாட்டீர்கள்.

லோக்சபா தேர்தலுக்கு பின் தென் மண்டலத்தில் ஒரு திராவிட கட்சியும் இருக்காது. திமுக இருக்காது. தேர்தல் முடிந்த பின் கேளுங்கள். நானும் எங்கேயும் செல்ல மாட்டேன். நீங்களும் எங்கேயும் செல்ல மாட்டீர்கள். நான் சும்மா சொல்லவில்லை. குறிச்சி வச்சுக்கோங்க. அரசியல் களத்தை நன்றாக ஆராய்ந்து சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள், என்று சவால் விட்டு இருந்தார்.

அதேபோல் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய அண்ணாமலை.. நான் சொல்கிறேன் உறுதியாக சொல்கிறேன். பாஜக 25 சதவிகித வாக்குகளை வெல்லும். நான் ஒரு மாநில தலைவர். இது தேசிய ஊடகம். லைவில் பேசிக்கொண்டு இருக்கின்றேன். சும்மா சொல்லவில்லை.

நான் பேசுவது ரெக்கார்ட் ஆகும். நான் போகிற போக்கில் சொல்ல முடியாது. சொல்ல கூடாது. நாங்கள் 25 சதவிகிதம் வாக்குகள் எடுப்போம். 500 சதவிகித வளர்ச்சி. நான் சொல்வதை நீங்கள் தேர்தலுக்கு பிறகு உணர்வீர்கள் என்று பேசி இருந்தார்.

வீணான பேச்சுக்கள்: ஆனால் இந்த பேச்சுக்கள் எல்லாம் வீணாகி உள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கள் மிக மோசமான பின்னடைவையே கொடுத்துள்ளன. அந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பாஜக கூட்டணியில், ஏசி சண்முகம், சௌமியா அன்புமணி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாரிவேந்தர், நயினார் கண்டிப்பாக நல்ல வாக்கு வங்கியை எடுப்பார்கள்.

இவர்கள் எல்லாம் பெரிய தலைகள். ஆனால் இவர்களில் கூட ஒருவரும் வெற்றிபெறவில்லை. முக்கியமாக தென்மண்டலத்தில் போட்டியிட்ட எல்லோரும் தோல்வி அடைந்துள்ளனர்.

வாக்கு சதவிகிதமும் சரி; தமிழக பாஜக வாக்கு சதவீதம் அடிப்படையில் பார்த்தால்

2014: 5.5% (2,223,566 வாக்குகள்) (என்டிஏ கூட்டணி)
2019: 3.7% (1551924 வாக்குகள்) (அதிமுக கூட்டணி)
2024: 10.7% (3345897 வாக்குகள்) (என்டிஏ கூட்டணி) முன்னேற்றம் போல தெரியலாம்.

ஆனால் 2014ல் பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. அப்போது அவர்கள் போட்டியிட்டது 8 சீட். 2019ல் அவர்கள் போட்டியிட்டது 5 சீட். 2019ல் ஒரு தொகுதிக்கு 3 லட்சம் வாக்குகள் வந்துள்ளது. 2014ல் ஒரு தொகுதிக்கு சராசரியாக 277945 வாக்குகள் வந்துள்ளது. ஆனால் 2024ல் 23 இடங்களில் பாஜக சின்னம் நின்றுள்ளது. பாரி வேந்தர் தேவநாதன் யாதவ் எல்லாம் சேர்த்து.

இதில் தொகுதிக்கு 1.7 லட்சம் வாக்குகள் என்று பாஜக சுருங்கி உள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் எடுத்ததை விட பாஜக சரிந்து உள்ளது. 50 சதவிகித வளர்ச்சி அண்ணாமலை தலைமைக்கு கீழ் சென்றுள்ளது. மொத்தமாக 11 சதவிகிதம் வாக்கு பெற்றுள்ளது. பாஜக 25 சதவீதம் வாக்குகளை பெறும் என்று அண்ணாமலை கூறிய நிலையில் அதுவும் அண்ணாமலைக்கு எதிராக திரும்பி உள்ளது.

பயன் தராத யாத்திரை: பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணை அமைச்சரான காரணத்தால் அண்ணாமலை திடீரென மாநில தலைவர் பொறுப்பிற்கு வந்தார். எச். ராஜா, கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன் என்று பல மூத்த தலைவர்கள் இருந்த போதிலும், கட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகாத அண்ணாமலைக்கு நேரடியாக பாஜக தமிழக தலைவர் ஆனார்.

கர்நாடக சிங்கம்.. ஸ்டிரிக்ட் ஆபிசர் என்றெல்லாம் அண்ணாமலையை புகழ இணையத்தில் ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருந்தது. இருந்தாலும் அண்ணாமலை மீது தற்போது கட்சியின் டாப் நிர்வாகிகளே கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கினர். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால் அண்ணாமலைக்கு கீழ் கட்சி வளராமல்.. பெரும்பாலும் சர்ச்சை மட்டுமே நிலவியது.. இதே அண்ணாமலை தலைமையில் கீழ்தான் கேடி ராகவன் பெண் ஒருவருடன் பேசும் ஆபாசமான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அதன்பின் பல ஆடியோ வீடியோ விவகாரத்தில் வரிசையாக காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா உள்ளிட்ட பலர் வெளியேறினார்கள்.

பயன் தராத யாத்திரை; இப்படி சர்ச்சைகளுக்கு இடையில்தான் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை சென்றார். பாஜக முன்னாள் தலைவர் எல் முருகனின் வேல் யாத்திரைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் 4 எம்எல்ஏ இடங்களை வென்றது. அதேபோல் தமிழிசை தலைவராக இருந்த போது 2 இடங்களை பாஜக வென்றது.

ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலைக்கு கீழ்.. அவர் என் மண் என் மக்கள் யாத்திரை சென்றும் கூட ஒரு எம்பி சீட் கூட கிடைக்கவில்லை. அவரின் அரசியல் டிராக் ரெக்கார்ட் இதுவரை பூஜ்ஜியமாகவே உள்ளது. இந்த என் மண் என் மக்கள் யாத்திரை வாக்கு சதவிகிதம் ரீதியாகவும், இடங்கள் ரீதியாகவும் சரி அவருக்கும் கட்சிக்கும் பலன் கொடுக்கவே இல்லை.

தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமைக்கு கீழ் கட்சி வளர்ந்துவிட்டதாக வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பெரிய வளர்ச்சி எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஏற்படவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+