அடடே.. நித்தியானந்தா பாராட்டிய இயக்குநர் பேரரசுக்கு பாஜக மாநில பதவி.. அண்ணாமலை கிஃப்ட்
சென்னை: ஊர் பெயர்களை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பேரரசு பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் அக்கட்சியில் அவருக்கு மாநில பதவியை வழங்கி இருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் பேரரசு. நடிகர் விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, அஜித்தை வைத்து திருப்பதி, விஜயகாந்தை வைத்து தர்மபுரி, பரத்தை வைத்து பழனி, திருத்தணி படங்களை இயக்கினார்.
அதேபோல் அர்ஜுனை வைத்து திருவண்ணாமலை திரைப்படத்தை இயக்கிய பேரரசு, மளையாளத்தில் சாம்ராஜ்ஜியம் 2 சன் ஆஃப் அலெக்சாண்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

பேரரசுவின் கடைசி திரைப்படம்
இதில் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெற்றன. மற்ற படங்கள் சரியாக வரவேற்பை பெறாத காரணத்தால் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழில் அவர் புதிதாக எந்த படத்தையும் இயக்கவில்லை. கடைசியாக அவர் இயக்கிய மளையாள திரைப்படமான சாம்ராஜ்ஜியம் 2015 ஆம் ஆண்டு வெளியானது.

பாஜகவில் இணைந்த பேரரசு
இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இயக்குநர் பேரரசு, கடந்த 2020 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்தார். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்த இவர், ஊர் பெயர்களை தலைப்பாக கொண்டு படங்களை இயக்கியதால் புகழ்பெற்றார்.

பாஜகவுக்கு ஆதரவாக பேச்சு
தொடர்ந்து சினிமா விழாக்கள், பாஜக நிகழ்வுகளில் கலந்துகொண்டு இவர் தெரிவித்து வந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்தன. இந்துத்துவத்துக்கு ஆதரவாகவும், திமுக, திராவிட இயக்கங்களை விமர்சித்தும், பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தும் தொடர்ந்து தொடர்ந்து பேரரசு தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

வெற்றிமாறனுக்கு பதிலடி
சமீபத்தில்கூட இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜன் சோழன் பற்றி தெரிவித்த கருத்தை கடுமையாக விமர்சித்தார் இயக்குநர் பேரரசு. "ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றிவிட்டார்கள் என வெற்றிமாறன் கூறுகிறார். அப்படியென்றால் அவர் என்ன கிறிஸ்தவரா? இல்லை இஸ்லாமியரா? சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதானே இருந்தது. அதை சேர்த்துதானே தமிழ்நாடு என்கிறோம்.

நித்தியானந்தா கொடுத்த விருது
அப்படியென்றால் தமிழ்நாடே இல்லை என்பீர்களா? சைவம், வைனவம் ஆகிய அனைத்தும் இந்திய மதங்கள். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து இந்தியர் என்றார்கள்." என்று கூறினார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இயக்குநர் பேரரசுவுக்கு தர்மத்தின் பாதுகாவலர் என்ற விருதை வழங்குவதாக காவல்துறையால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா அறிவித்தார்.

பாஜகவில் மாநில பதவி
இந்த நிலையில்தான் பாஜக வெளிநாடு - அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணை தலைவராக இயக்குநர் பேரரசுவை நியமனம் செய்து இருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த அணியின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் சூர்யா சிவா - டெய்சி ஆடியோ விவகாரத்தில் கருத்து தெரிவித்ததற்காக கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கம் செய்யப்பட்டார்.

எந்த அணி?
இதன் தொடர்ச்சியாக, "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலச் தலைவராக இசையமைப்பாளர் தினா அவர்களும் மாநில துணை தலைவர் ஆனந்த் அய்யாச்சாமி அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்" என்று அண்ணாமலை அறிவித்தார். தற்போது அந்த பிரிவின் மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர்களின் முதல்கட்ட பட்டியலை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.
-
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி! -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார்












Click it and Unblock the Notifications