ஒரு வார்த்தை சொன்ன டிகே சிவகுமார்.. டக்கென பாய்ந்து வந்து காட்டமாக பதிலடி கொடுத்த அண்ணாமலை!
சென்னை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சீண்டி இருந்த நிலையில், அவருக்கு எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.
மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அதனை மக்கள் தொகை அடிப்படையில் செய்யக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் மாநிலங்களுமே பாதிக்கப்படும். இதனால் ஏற்படப்போகும் சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்கும், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை ஒத்தி வைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு இன்று சென்னையில் தென்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தியது.
இதில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சீண்டி இருந்தார். மேகதாதுவில் கர்நாடக நிச்சயம் அணை கட்டும் என அம்மாநில துணை முதலமைச்சரான டிகே சிவக்குமார் தொடர்ச்சியாக கூறி வருகிறார். அதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கர்நாடகா மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சட்டப்படியாகவும், அரசியல் தளத்திலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் மேகதாது அணை கட்டுவோம் என கூறும் டிகே சிவக்குமார் தமிழ்நாடு வந்தால் நிச்சயம் தமிழ்நாடு பாஜக கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, இன்று தமிழ்நாடு பாஜக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் டிகே சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "பாஜக நடத்தும் கருப்புக்கொடி போராட்டத்தை வரவேற்கிறேன். என்னை அவர்கள் திகார் சிறையில் அடைத்தபோதுகூட பயப்படாதவன், அவர்கள் நடத்தும் இந்த கருப்புக்கொடி போராட்டத்துக்கா நான் பயப்படப்போகிறேன். அண்ணாமலையை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் கர்நாடகாவில் தான் அவர் பணியாற்றினார். எங்களுடைய பலம் என்ன என்று அவருக்கும் தெரியும். அதனால் அவருக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆம், நான் ஒரு காவல்துறை அதிகாரியாக கர்நாடக மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தேன். அதனை நினைவுகூர்ந்து குறிப்பிட்டதற்கு நன்றி. இந்த எளிய மனிதனை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும், சித்தராமையாவை அவரது நாற்காலியில் இருந்து வீழ்த்தி கர்நாடக முதல்வராகும் உங்கள் அயராத முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா!












Click it and Unblock the Notifications