232 தொகுதிகளை கடந்து விட்டோம்.. இன்னும் 2 தான் பாக்கி! இனி எல்லாம் மாறும்.. அண்ணாமலை நம்பிக்கை
சென்னை: இன்றைய தினம் மதுராந்தகம் தொகுதியில் நடந்த என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தியதன் மூலம் தமிழகத்தின் 232 ஆவது சட்டசபை தொகுதியை கடந்தோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு விளக்கவும் தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைக்கவும் என் மண் என் மக்கள் எனும் யாத்திரையை தொடங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். அங்கிருந்து தினம் ஒரு தொகுதிகளில் பொதுக் கூட்டத்தை நடத்தினார். பிப்ரவரி 10 ஆம் தேதி உத்தரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் கூட்டத்தை நடத்தினார்.
இந்த நிலையில் மதுராந்தகத்தில் யாத்திரையை நடத்திய அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நமது என் மண் என் மக்கள் யாத்திரை இன்றுடன் 232 சட்டசபை தொகுதிகளை கடந்திருக்கிறோம்.
சற்று நேரத்திற்கு முன்பு 232 ஆவது தொகுதியாக மதுராந்தகத்தை கடந்துவிட்டு நாளை மறுநாள் திருப்பூரில் 233, 234 ஆவது தொகுதியை கடக்க இருக்கிறோம். இந்த கடுமையான பயணத்தில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சகோதர சகோதரிகள், பொதுமக்கள், மாற்றத்தை விரும்பக் கூடியவர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக ஒரு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து கூடவே வந்திருக்கிறீர்கள்.
மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். தமிழக அரசியலில் நாம் இத்தனை காலமாக எதிர்பார்த்த மாற்றம் நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நடக்கும் என்பது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு பக்கம் பிரதமர் மோடியின் அற்புதமான ஆட்சி, மறுபக்கம் தமிழக பாஜகவின் கடுமையான உழைப்பு, இன்னொரு பக்கம் தமிழக மக்களின் நேர்மையான அரசியலுக்கான ஏக்கம்.
இந்த மூன்றுமே 2024 ஆம் ஆண்டு நமக்கு வெற்றி ஆண்டாக மாற இருக்கிறது. எனது அன்பான வேண்டுகோள் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பயணம் செய்தவர்கள், யாத்திரையை பார்த்தவர்கள், அன்புமழையை பொழிந்தவர்கள், யாத்திரைக்கு உதவியவர்கள், யாத்திரையை பார்க்க முடியாமல் தவறவிட்டவர்கள் ஆகியோர் வரும் 27ஆம் தேதி பல்லடத்தில் நடைபெறும் இந்த யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சிக்கு அவசியம் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இது அண்ணாமலையின் யாத்திரையோ பாரதிய ஜனதா கட்சியின் யாத்திரையோ இல்லாமல் இது உங்களுடைய யாத்திரை, மக்கள் இயக்கமாக எழுச்சி மிகுந்த ஒரு பயணமாக நாளை நமது என்ற நம்பிக்கை கொடுக்கக் கூடிய வெற்றிவிழாவாக பல்லடத்தில் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இதை எனது தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தமிழக சகோதர, சகோதரிகளையும் நான் அழைப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். பல்லடத்திற்கு 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அவருக்கு உங்கள் ஆசிர்வாதத்தையும் அன்பையும் கொடுங்கள். உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுங்கள். நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 232 தொகுதிகளுக்கு என்னோடு வந்திருக்கிறீர்கள். மிகப் பெரிய எழுச்சியை என்னுடன் சேர்ந்து நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு எப்பொழுதும் நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். நிச்சயம் இதை முடித்து காட்டுவோம். எடுத்திருக்கும் பணியை வெற்றிகரமாக நடத்தி காட்டி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொடுப்போம். நாளை நமது பாரத் மாதா கீ ஜே, ஜெய்ஹிந்த்! இவ்வாறு அண்ணாமலை பேசியுள்ளார்.
-
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு!












Click it and Unblock the Notifications