அண்ணாமலை அரைவேக்காடு என்பது ஊருக்கே தெரியும்.. மீண்டும் பாஜகவை வம்புக்கு இழுக்கும் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜகவையும் அண்ணாமலையையும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Annamalai is half baked says AIADMK former minister RB Udhayakumar

ஆர்பி உதயகுமார் பேசுகையில், "நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி உடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் அதிமுக ஈடுபட்டால் அக்கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய அமைச்சர் பதவி தருகிறோம், ஆளுநர் பதவி தருகிறோம் என கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டது. தனது கட்சியோடு கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டையே பட்டா போட்டு தருவதாக கூறினார்கள்.

அண்ணாமலையின் பேச்சுக்கள் அரைவேக்காட்டுத்தனமானது என நான் சொல்லவில்லை, தமிழக மக்களுக்கே தெரியும். அண்ணாமலை பேச்செல்லாம் பொய்யானது, அவர் கர்நாடகாவில் என்ன பேசினார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். தமிழ் மொழி, தமிழ் இனம் குறித்து அண்ணாமலைக்கு என்ன தெரியும்? அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெரும். அதிமுகவில் குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார்கள்." என்றார்.

மேலும் பேசிய ஆர்பி உதயகுமார், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் திமுகவுக்குள் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்க உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திமுகவிற்குள் ரகசிய கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அறிவாலயத்தில் புகைந்து கொண்டிருக்கும் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "பேரிடர் காலங்களில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பேரிடர் பாதிப்புகளை அரசு தடுக்க முடியாது ஆனால் மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் உண்மையில்லை. இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்ட ஓபிஎஸ்சை எந்த வகையில் ஏற்க முடியும்? என உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+