ரஜினிகாந்த் ஒரு தலைவராக அட்வைஸ் கொடுப்பார்.. ஒவ்வொரு மாதமும் சந்திக்கிறேன்.. அண்ணாமலை ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய தலைவர் மற்றும் எனது குரு என்று தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த்தை ஒவ்வொரு மாதமும் சந்தித்து வருவதாக கூறிய அண்ணாமலை, இந்த சந்திப்பு அரசியல் ரீதியிலானது அல்ல என்றும், வெறும் நட்பு ரீதியிலானது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது மீண்டும் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Annamalai met Rajinikanth

நயினார் நாகேந்திரன் டெல்லி சென்ற நிலையில், அண்ணாமலை கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தியது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதேபோல் நடிகர் ரஜினிகாந்த்தையும் அண்ணாமலை சந்தித்திருந்தார். அதிமுக - பாஜக கூட்டணிக்கு தவெக மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், ரஜினிகாந்த்தை அண்ணாமலை சந்தித்தது ஏன் என்ற கேள்விகளும் எழுந்தன.

இதுகுறித்து சென்னையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ரஜினிகாந்த் சாரை அடிக்கடி சந்திப்பேன்.. மாதத்திற்கு ஒருமுறை அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை சந்திப்பேன். ரஜினிகாந்த் எனக்கு ஒரு தலைவர். அவரை வெறும் சினிமா நடிகராக மட்டும் பார்க்கவில்லை. அவருடன் ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது. ஆன்மீகத்துடன் அடிப்படையில் ரஜினி சாருடன் தொடக்கம் முதலே நட்பு இருக்கிறது.

அவரையும் சமீபத்தில் சந்தித்தேன். ரஜினிகாந்த்தை திடீரென சென்று சந்திக்கவில்லை. அவரை அடிக்கடி சந்தித்து வருகிறேன். அவர் ஆன்மீகத்தை பற்றி பல விஷயங்களை சொல்வார். யோகா செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவார். ஒரு தலைவராக அறிவுரை கூறுவார். அவரை குருவாக பார்க்கிறேன். எதனையும் வெளிப்படையாக செய்யக் கூடியவன் நான்.

பாஜகவின் தேசிய தலைவரான ஜேபி நட்டா, பிஎல் சந்தோஷ் உள்ளிட்டோரிடம் கூட வெளிப்படையாக கருத்துக்களை வெளிப்படுத்துவேன். தனிப்பட்ட முறையில் நடக்கும் சந்திப்புகளை பொதுவெளியில் சொல்லக் கூடாது. அது நட்பு.. அரசியல் கிடையாது. அதனால் ரஜினிகாந்த்தை சந்தித்ததற்கு பின் எந்த வியூகங்களையும் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பாக அண்ணாமலை அவரின் கட்சியில் இணைவதற்காக காத்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் காலம் தாழ்த்தியதால், அவர் உடனடியாக பாஜகவில் இணைந்து கொண்டார். அதேபோல் தொடக்கம் முதலே ரஜினிகாந்த் மற்றும் பாஜக இடையில் நல்ல உறவு இருந்து வரும் நிலையில், அண்ணாமலை தொடர்ச்சியாக ரஜினிகாந்த்தை சந்தித்து ஆலோசிப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+