ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை!
சென்னை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் தனது இயக்கத்தில் இணைந்ததற்கு நன்றி தெரிவித்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை அந்தக் கட்சியிலிருந்து விலகினார். ஏற்கெனவே அவர் தொடங்கிய We the leader என்ற அமைப்பில் தனது ஆதரவாளர்கள் இணையுமாறு நேற்று அழைப்பு விடுத்தார். அவர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டபோது 14 ஆயிரம் பேர் மட்டுமே இயக்கத்தில் இணைந்திருந்தனர். தொடர்ந்து சில மணி நேரங்களில் லட்சக்கணக்கானோர் இணைந்தனர்.

பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ஏராளமானோர், அக்கட்சியில் இருந்து விலகி அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்துள்ளனர். அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார். தனது இயக்கத்தில் இணைந்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, http://wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும் அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம்.

மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம். தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தலைமையில் புதிய அரசியல் கட்சி தமிழ்நாட்டில் உருவாகிறது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பை அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ளார். கண்டிப்பாக அடுத்து நடக்கக்கூடிய தமிழகத்தின் பொதுத்தேர்தலில் நம் கட்சி போட்டியிடும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications