அண்ணாமலை காட்டியது சீட்டு தான்.. ரஃபேல் வாட்ச் பில் இல்லை.. சிட்டையை காட்டி சீட்டிங் - ஆர்.எஸ்.பாரதி
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சுக்கான பில் என்று கூறி செய்தியாளர் சந்திப்பில் காட்டிய நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "அண்ணாமலை காட்டியது சீட்டு.. ரசீதைக் காட்டாமல் சிட்டையைக் காட்டி சீட்டிங் செய்கிறார் அண்ணாமலை" என விமர்சித்துள்ளார்.
திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை, ஆதாரங்களுடன் இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியல் என ஒரு பட்டியலை வெளியிட்டார்.

மேலும், தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சுக்கான பில் என்று கூறி அதனையும் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் இருந்தபோது லஞ்ச பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். அந்த வாட்ச்சை எனக்கு கொடுத்ததே எனது நண்பர் தான். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பர் ஒருவர் எனக்கு வழங்கிய அந்த ரஃபேல் வாட்சின் விலை 3 லட்சம் ரூபாய் மட்டுமே எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில் என்று கூறி வெளியிட்டதை விமர்சித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, "சிட்டை வேறு.. ரசீது வேறு.. அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில்லை எங்கே காட்டினார்? வெறும் சீட்டைத் தான் காட்டியுள்ளார் சீட்டிங் அண்ணாமலை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணாமலைக்கு உண்மையைப் பேசி எப்போதும் பழக்கமில்லை. அண்ணாமலை எதையோ சொல்லி பூ சுற்றுகிறார்.

அனைவரின் நேரத்தையும் அண்ணாமலை வீணடித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை." என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications