அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா?
சென்னை: தமிழக அரசியலில் "புலி வருது புலி வருது" கதையாக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் ஒருவழியாக வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் 27 தொகுதிகளில் களம் காணும் பாஜக, வேட்பாளர் தேர்வில் சந்தித்த உட்கட்சி மோதல்களும், இழுபறிகளும் இப்பட்டியலின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதுகுறித்த பிரத்யேக செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
புலி வருகிறது புலி வருகிறது என்ற கதையாக கடந்து சில நாட்களாகவே இதோ வெளியாகிறது அதோ வெளியாகிறது என எதிர்பார்ப்பை எகிறவிட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக ஓரளவு செல்வாக்குள்ள பல்வேறு தொகுதிகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டு மிகவும் டஃப்பான தொகுதிகளை பாஜகவிற்கு ஒதுக்கி விட்டது என பாஜக தொண்டர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
கோவை வடக்கு தொகுதி
அதோடு எந்த தொகுதி யாருக்கு என்பதில் பாஜக நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவி வந்ததாலும் தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் டெல்லி தலைமை முடிவெடுக்க முடியாமல் தவித்து வந்தது. குறிப்பாக கோவை வடக்கு தொகுதியை குறிவைத்து அண்ணாமலை மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் நடத்தி வந்த உள்குத்து அரசியலால் பாஜக டெல்லி தலைமை கடுப்பில் இருந்தது.
ஒரே தொகுதியை இருவரும் கேட்பதால் யாருக்கு ஒதுக்குவது என முடிவெடுக்க முடியாத பாஜக ஒரு வழியாக இறுதி வேட்பாளர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை பெயர் மிஸ்ஸிங். எந்த தொகுதியை குறிவைத்து இத்தனை நாட்களாக அண்ணாமலை தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தாரோ அந்த கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மிஸ்ஸான பெயர்
தான் கேட்கும் தொகுதி கிடைக்காவிட்டால் இந்த தேர்தலில் போட்டியிடுவதையே தவிர்க்கப் போவதாக அண்ணாமலை கூறிய நிலையில் அவரை கன்வின்ஸ் செய்யும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டது. இப்போது வெளியாகியிருக்கும் பட்டியலில் அண்ணாமலை பெயர் விடுபட்டிருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
பாஜக தேசிய தலைமை அண்ணாமலையை கன்வின்ஸ் செய்து விட்டதா? அல்லது? அண்ணாமலையை ஓவர்லுக் செய்து இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒருவேளை அண்ணாமலையை பாஜக டெல்லி தலைமை ஓவர்லுக் செய்திருந்தால் அண்ணாமலையின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதுதான் தற்போதைக்கு தமிழக பாஜக தொண்டர்களிடையே மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிற்கும் மிகப்பெரிய கேள்வி,.
அண்ணாமலை அடுத்த பிளான்?
தன்னுடைய அதிரடி அரசியலால் தமிழக பாஜகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறிவந்த அண்ணாமலைக்கு, சொந்தக் கட்சியிலேயே சீட் கிடைக்காதது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் பெயர் விடுபட்டிருப்பது வெறும் தற்செயலான நிகழ்வா அல்லது அவரது அரசியல் ஆட்டத்திற்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியா என்று தெரியவில்லை,.
ஒருவேளை அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டிருந்தால், அவரது அடுத்தக்கட்ட ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? அவர் அமைதி காப்பாரா அல்லது அதிருப்தியில் மாற்று முடிவுகளை எடுப்பாரா? என்பதுதான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்...!!!
- நமது சிறப்பு நிருபர்
-
4 அதிமுக விக்கெட் காலி.. இபிஎஸ்ஸுக்கு தலைவலி.. தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர்கள்.. விஜய் தந்த செக்மேட் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
இணையதளம் இதுதான்.. அண்ணாமலை அரசியல் இயக்கத்தில் இணைவது எப்படி? வெளியான அறிவிப்பு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி!












Click it and Unblock the Notifications