தவெக அரசை பாராட்டிய அண்ணாமலை.. ஆனா.. மேட்டரையே தப்பா சொல்லிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தவெக அமைச்சரவையில் 8 பெண் அமைச்சர்கள் இருப்பதை கட்சி, கொள்ளை எல்லாம் தாண்டி பாராட்ட வேண்டும் என 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை பேசியுள்ளார். தமிழக அமைச்சரவையில் 4 பெண்கள் மட்டுமே உள்ள நிலையில் தவறான புள்ளி விவரத்தைக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி காமராஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு சாதனை படைத்த பெண்களுக்கு வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை காமராஜர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

Annamalai Praises Women s Representation in TVK Cabinet But Cites Incorrect Figure of 8 Ministers

இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, "தமிழக வெற்றிக் கழக அரசை உண்மையாக பாராட்ட வேண்டும். ஒன்று, இரண்டு, மூன்று என இருந்த பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை இப்போது எட்டாக மாறி உள்ளது. இதற்காக கொள்கை கட்சி, தாண்டி தவெக அரசை பாராட்ட வேண்டும்.

நமது ஆட்சியில் 35 அமைச்சரவையில் சரிபாதியான 18 பெண்களை அமைச்சரவையில் அமர வைக்க வேண்டும். மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவர பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். 2029 நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வரும்போது நாடாளுமன்றத்திற்கு அதிகமான பெண்கள் செல்வார்கள். அதற்கு பெண்களை இப்போதே நம்மிடம் இருந்து பயிற்சி அளித்து தயார் செய்ய வேண்டும்." எனப் பேசினார்.

தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் தவெக அமைச்சரவையில் 8 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என்றும், இது கட்சி பாகுபாடின்றி பாராட்ட வேண்டிய விஷயம் என்று கூறினார். தவெக அமைச்சரவையில் 4 பெண்கள் மட்டுமே உள்ள நிலையில் தவறான புள்ளி விவரத்தைக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசியுள்ளார்.

தவெக அமைச்சரவையில் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி, கமலி ஆகிய 4 பெண் அமைச்சர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். தவெக அரசில் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கைதான் 8. பட்டியலின அமைச்சர்களின் எண்ணிக்கையை, பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை எனத் தவறாக அண்ணாமலை பேசியுள்ளார்.

விஜய் தலைமையிலான தவெக அரசை திறந்த மனதோடு பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு, தவறான புள்ளி விவரத்தைச் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+