அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலில் களமிறங்கப் போகிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அவர் எந்த அரசியல் கட்சியில் சேரப் போகிறார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில், அண்ணாமலையின் இயக்கத்தில் அவர் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பல முகங்களைக் கொண்ட ராகவா லாரன்ஸ், சமூக சேவைகளுக்காகவும் தனி அடையாளம் பெற்றவர். மாற்றுத்திறனாளிகள், ஏழை மாணவர்களுக்காக அவர் செய்த பல உதவிகள் காரணமாக பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

Raghava Lawrence politics

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக அறியப்படும் லாரன்ஸ், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவார் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவலாக இருந்தது.

ராகவா லாரன்ஸ்

ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தில் இருந்து விலகியதால், லாரன்ஸின் அரசியல் வருகையும் அப்போது தள்ளிப்போனது. இதற்கிடையில் பலமுறை அவரது அரசியல் வருகை குறித்து தகவல்கள் வெளியானாலும், அவர் எந்தக் கட்சியிலும் இணையவில்லை. இதனால் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற கேள்வி நீண்ட காலமாக நீடித்து வந்தது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அரசியல் என்ட்ரி

இதற்கு விளக்கம் அளித்த லாரன்ஸ், அரசியல் தொடர்பாக ஒரு முக்கிய முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும், தனது தாயாரின் ஆசீர்வாதத்துடன் அந்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
பின்னர் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு காரணமாக தனது அறிவிப்பை ஒத்திவைத்தார். இதனால் அவரது முடிவு குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

ரஜினிகாந்த்

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் சிந்தனைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், பின்னர் அவர் அந்த முடிவில் இருந்து விலகியபோது மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு போராட்ட காலத்தில் ஏற்பட்ட சில அரசியல் விமர்சனங்களே தனது வாழ்க்கையில் அரசியல் குறித்த சிந்தனையை உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய்

அதேநேரத்தில் நடிகர் விஜய்யுடனான தனது நட்பைப் பற்றியும் அவர் பேசியிருந்தார். பல திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியதை நினைவுகூர்ந்த அவர், "விஜய் ஒரு முடிவு எடுத்தால் அதை நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டார்" என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாக கூறினார். விஜய் அரசியலுக்கு வந்தபோது தானும் அரசியலில் இணையலாமா என்று தனது தாயாரிடம் கேட்டதாகவும், ஆரம்பத்தில் அதற்கு அவரது தாயார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை பார்த்த பிறகு தனது தாயார் அனுமதி அளித்ததாக தெரிவித்தார்.

அண்ணாமலை

அதன் பின்னர்தான் ரசிகர்களின் கருத்தை கேட்க முடிவு செய்ததாகவும், "எனக்கு தாய்க்கு நிகரானவர்கள் ரசிகர்கள். நான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் புதிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளன. அண்ணாமலை தொடங்கியுள்ள "வி தி லீடர்ஸ்" என்ற மக்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாகன்

இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அண்ணாமலையின் அரசியல் முயற்சிகளுக்கு ரஜினிகாந்த் ஆதரவு இருப்பதாக பல்வேறு அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் அண்ணாமலையை நோக்கிச் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் ரஜினிகாந்தின் மருமகன் விசாகன் சமீபத்தில் அண்ணாமலையை சந்தித்து அவரது புதிய இயக்கத்தில் இணைய தயாராக இருப்பதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

ஏ.கே. விஸ்வநாதன்

இதனால் ரஜினி ரசிகர்கள் வட்டாரத்திற்கும் அண்ணாமலையின் இயக்கத்துக்கும் இடையே ஒரு தொடர்பு உருவாகி வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையில் முன்னாள் காவல் துறை அதிகாரி ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் "வி தி லீடர்ஸ்" இயக்கத்தில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அரசியல், சினிமா மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் பலருடன் அண்ணாமலை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+