ரூ.100 கோடி வசூலா.. "டாக்சிக்" படம்.. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்சிக் படம் பற்றி பேசிய அண்ணாமலை, "படத்திலேயே நீங்க பெண்களை சித்தரிக்கின்ற விஷயத்தினை சொல்லி.. அதை முதல் நாளில் 104 கோடி வசூல் செய்ய வைத்து.. அதை வந்து ஒரு ஒரு நாளும் நம் குழந்தைகளை, நம் மாணவர்களை பார்க்க வைத்தால், நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்க நடக்கும்?" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் "நாம் எல்லாம் ஊர் ஊராக.. கல்லூரி கல்லூரியாக சென்று தொண்டை தண்ணீர் வத்த பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகிறோம். ஆனால் ஒரு படத்தை எடுக்கிறார்கள். சென்சாரிலும் கிளியர் பண்றாங்க.. தியேட்டருக்கும் கொண்டு வருகிறார்கள். அதில் பெண்களுக்கு மரியாதை இருக்கிறதா என்றால் இல்லை" என பேசியுள்ளார்.

Annamalai raises concerns regarding the movie Toxic alarm social media addiction

டாக்சிக் படம்

விஜய்யின் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் யாஷ் நடிப்பில், டாக்ஸிக் படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிக அளவில் இருப்பதாகவும் படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வி தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலையும் டாக்ஸிக் படம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணாமலை பேசியதாவது:- "நேற்று ஒரு படத்தை பற்றி கேள்விப்பட்டேன். இரண்டு விதமான கருத்து.. அந்த படத்தை நான் சொன்னால் என் மீது வழக்கு போட்டுவிடுவார்கள்.

அண்ணாமலை விமர்சனம்

ஏற்கனவே என் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே படத்தின் பெயரை சொல்லாமலேயே சொல்கிறேன். அந்த படம் நேற்று தான் ரிலீஸ் ஆச்சு.. என்.டி.டிவியில் பார்த்தேன் முதல் நாளிலேயே ரூ.104 கோடி வசூல் செய்துள்ளதாம். ஒரு பெரிய நடிகர் நடித்த படம் அது. அந்த படம் முதல் நாளிலேயே ரூ.104 கோடி வசூல் செய்கிறது. அந்த படத்திற்கு பெயரையே நீங்க பார்த்தீங்கன்னா.. டாக்சிக்கா நாம பல விஷயங்களில் பேசுகிறோம்.. அதையே அவர்கள் பெயராக வைத்துள்ளார்கள்.

அப்போது தான் நான் பார்த்தேன்.. படத்திலேயே நீங்க பெண்களை சித்தரிக்கின்ற விஷயத்தினை சொல்லி.. அதை முதல் நாளில் 104 கோடி வசூல் செய்ய வைத்து.. அதை வந்து ஒரு ஒரு நாளும் நம் குழந்தைகளை, நம் மாணவர்களை பார்க்க வைத்தால், நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்க நடக்கும்?

உரிய மரியாதை கொடுக்கப்பட வில்லை

நாம் எல்லாம் ஊர் ஊராக கல்லூரி கல்லூரியாக சென்று தொண்டை தண்ணீர் வத்த நாம பேசுகிறோம். ஆனால் ஒரு படத்தை எடுக்கிறார்கள். சென்சாரிலும் கிளியர் பண்றாங்க.. தியேட்டருக்கும் கொண்டு வருகிறார்கள். அந்த படத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டால் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை" என்று பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது:- மெட்டா போன்ற சோஷியல் மீடியா நிறுவனங்களுக்கு வருவாய் அளிப்பதில் இந்தியதான் பெரிய பங்கு வகிக்கிறது. எல்லோரும் ஷோஷியல் மீடியாவில் அக்கவுண்ட் வைத்து இருப்பதால், அதற்கு அடிக்ட் ஆகிவிட்டோம். அல்காரிதம் மக்களை அடிக்ட் ஆக்குகிறது. சோசியல் மீடியாவில் மட்டும்தான் இருக்கிறோம். அதனால் ஒரு தலைமுறை Zombie-க்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

மாணவ செல்வங்களுக்கு சோஷியல் மீடியாவும் கட்டுப்பாடான சூழலில் கிடைக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளும் இதை தடை செய்ய பரிசீலிக்க வேண்டும். கட்டுப்படான சூழலில் கொடுக்க வேண்டும் என்பது என்னை போன்றவர்களின் கோரிக்கையாக உள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+