நீங்கள் மலிவான மனிதரா என்பதை எது தீர்மானிக்கும் தெரியுமா? டிஆர் பாலுவுக்கு அண்ணாமலை பதில்
சென்னை: அண்ணாமலையெல்லாம் பெரியவரா.. அவருக்கு பதில் சொல்ற அளவுக்கு நான் சீப்பா போய்ட்டேனா.. என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் டிஆர் பாலு பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விவாதத்தின்போது, தமிழகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய வெள்ள நிவாரணம் தொடர்பாக திமுக எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்.. அப்போது திமுக மூத்த எம்பி டிஆர் பாலு துணை கேள்வி எழுப்பினார். அப்போது திடீரென குறுக்கிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார். அதற்காக எல் முருகனை டி.ஆர்.பாலு கடுமையாக சாடினார். அமைச்சராக இருக்கவே எல் முருகன் தகுதியற்றவர் என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தலித் அமைச்சரான முருகனை டிஆர் பாலு அவமதித்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, " மிகவும் வருத்தமான ஒரு விசயம். நாடாளுமன்றத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அவருடைய துறைச் சார்ந்த ஒரு கேள்விக்கு பதில் தருகிறார். அப்போது திமுகவின் மூத்த தலைவர், எம்பியுமான டி.ஆர்.பாலு, மத்திய இணையமைச்சர் முருகனைப் பார்த்து அன்ஃபிட் என்று கூறுகிறார். அதாவது தகுதியில்லாத அமைச்சர் என்று கூறுயிருக்கிறார்
ஒரு மத்திய அமைச்சர், நாடாளுமன்றத்தில் தன்னுடைய துறை சார்ந்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் அமைச்சரைப் பார்த்து டி.ஆர்.பாலு இப்படி கூறியிருக்கிறார். உடனடியாக, அங்கிருந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட அனைவரும் எழுந்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பிஃட் ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலு சொல்வாரா? கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? இல்லை ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் பிஃட் ஆன அமைச்சரா? இல்லை, பணக்காரர்களாக இருந்தால் பிஃட் ஆன அமைச்சரா? அமைச்சர் முருகனின் தாய் தந்தையர் நாமக்கல்லில் தோட்டத்து வேலை செய்து வருவதால், அவர் அன்பிஃட் அமைச்சரா? இல்லை அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்ததால் அன்பிஃட்டா?
எனவே, மத்திய இணையமைச்சர் முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள் முருகன் குறித்து தவறாக பேசவில்லை. அவருடைய சமுதாயம் குறித்து தவறாக பேசி உள்ளீர்கள். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசி உள்ளீர்கள்" என்று காட்டமாக அண்ணாமலை கூறினார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்அளித்த டிஆர் பாலு, அண்ணாமலைலாம் பெரியவரா.. அவருக்கு பதில் சொல்ற அளவுக்கு நான் சீப்பா போய்ட்டேனா.. பார்லிமென்டில் மெயின் கேள்வி எழுப்பியது யார் தெரியுமா? ஆ ராசா கேள்வி எழுப்பினார். அவரும் தலித்தானே.. கேள்வி கேட்டவரும் தலித்தான்... அதை மறந்துவிட்டு அவர் (முருகன்) பேசுகிறார்.. சேம்சைடு கோல் போடுகிறார்.. ஒரு தலித்தை எதிர்த்து இன்னொரு தலித் அப்படி பேசலாமா..
நான் தலித் என்பதற்காக முருகனை அப்படி பேசவில்லை. ஒரு அமைச்சராக இருந்து கொண்டிருப்பவரிடம் எந்த கேள்வி கேட்டோமோ அந்த கேள்விக்கு அந்த அமைச்சர் பேசலாம்.. அவருடைய துணை அமைச்சர் பதில் சொல்லலாம்.. இவர் (முருகன்) எதற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார். மீன்வளத்துறை அமைச்சர் இந்த கேள்விக்கு ஏன் பதில் பேசுகிறார்.. அதற்கு உள்நோக்கம் கற்பித்தால் நான் பொறுப்பல்ல
60 வருசமாக அரசியலில் இருக்கிறேன். நேற்று வந்த அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு நான் தாழ்ந்து போய்விட்டேனா.. என் பேச்சை முற்றிலும் தவறாக திரித்து பேசுகிறார்கள் . தமிழ்நாடு சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறார் ஆ ராசா, அவர் தலித். அவர் கேள்வியின் போது துணை கேள்வி நான் எழுப்புகிறேன்... அப்போது குறுக்கிடுகிறார்.. குறுக்கீடு செய்ய என்ன அருகதை இருக்கிறது... அவர் அந்த துறையின் துணை அமைச்சராக இருக்க வேண்டும். உள்துறையின் துணை அமைச்சராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கேள்வியை அவரே கேட்டு பதில் சொல்லி இருந்தால் பிரச்சனை இல்லை.. எதுவுமே இல்லாமல், சம்பந்தம் இல்லாமல் தலித் தலித் என்றால் என்ன... நாங்கள் என்ன தலித் விரோதிகளா.. நான் சாதி ரீதியாக யாரையும் தாழ்வு படுத்தவே மாட்டேன்." இவ்வாறு டிஆர் பாலு கூறினார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "நீங்கள் மலிவான மனிதரா என்பதை உங்கள் 65 வருட அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது, உங்களுடைய சிந்தனையும் செயல்பாடுகளுமே தீர்மானிக்கும் என்பதை திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கு மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications