Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் விஜய்யை கொண்டு வர அவருக்கு 80 சீட்கள் + துணை முதல்வர் பதவி வரை கொடுக்க பாஜக முன்வந்ததாக பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அண்ணாமலை அளித்த பதிலை இங்கு காணலாம்.

என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய்யை கொண்டு வர பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் இன்று தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் விஜய் இன்னும் நேரடியாக எந்த ஒரு அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

Annamalai Responds to Rumours of Offer to Vijay for Joining Alliance with 80 Seats and Deputy CM Post

திமுக எதிர்ப்பு வாக்குகள்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் திமுக ஒருபுறம் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. அதே சமயம் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக, அமமுக இருந்தாலும் பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சிகள் கூட்டணியில் இல்லை. இதற்கிடையே விஜய்யும் அரசியலில் குதித்துள்ளதால் அவர் பக்கமும் வாக்குகள் போகக்கூடும்.

போதாக்குறைக்கு விஜய்யும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரித்தால் அது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாதகமாக அமையும் என்பதால் விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று பாஜக தலைமை முடிவு செய்தது. இதற்காக பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகின.

அண்ணாமலை பேட்டி

முதலில் விஜய்க்கு 45 தொகுதிகள் கொடுக்க பாஜக முன் வந்ததாகவும், பின்னர் 80 தொகுதிகள் + துணை முதல்வர் கொடுக்க பாஜக முன்வந்ததாகவும், அதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் தான் விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதா என செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

முன்னுக்கு பின்னாக திருமாவளவன் பேசுறார்

அண்ணாமலை பேசியதாவது:- திமுக கடந்த இரண்டு தினங்களாக பதற்றத்தில் உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட வெளியில் போய்விட்டது. திருமாவளவன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவே இல்லை. எத்தனையோ கட்சிகள் வரவே மாட்டோம் என்கிறார்கள்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விஜய் எப்படி இருக்க வேண்டும்? விஜய் எப்படி இருக்க கூடாது? என்று முழு நேரம் அட்வைஸ் கொடுப்பதில் திமுகவிற்கு வேலையாக போய்விட்டது. திருமாவளவனும் அட்வைஸ் கொடுத்துகொண்டு இருக்கிறார். நான்கு நாள் முன்னாடி வரைக்கும் விஜய் ஆர்.எஸ்.எஸ் ஆள். நேற்றை பொறுத்தவரை விஜய் இந்தக் கூட்டணிக்கு வரக்கூடாது என்கிறார்.

விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?

அப்போ ஏதோ ஒரு முடிவு எடுத்து திருமாவளவன் சொல்லட்டும். அது எப்படி 4 நாள் முன்பு வரை விஜய் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்று சொன்ன திருமாவளவன் வரக்கூடாது என்று இப்போது எப்படி சொல்வார். தேவையில்லாத கருத்துகள் வைக்கிறார்கள். அதில் டிகேஎஸ் இளங்கோவன் கருத்தும் ஒன்று" என்றார்.

விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது:- யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி நேற்று சொன்னார். அவரது கருத்தையே நாங்கள் பார்க்கிறோம். தவெகவிடம் நீங்கள் கருத்தை கேட்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி கருத்து தான் இறுதி

எங்கள் கூட்டணி கட்சியின் தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமியின் கருத்துதான் இறுதி கருத்தாக நாங்கள் பார்க்கிறோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்க கூடிய இறுதி கருத்து. அதிமுக அதிக இடங்களில் நிற்க போகிறது. எனவே அதிமுக முடிவுதான் எல்லாருடைய முடிவும் கூட.

அதனால்தான் அவரது கருத்துதான் இறுதி கருத்து. அதிமுக மாவட்ட செயலாளர்களோ.. பாஜக மாவட்ட செயலாளர்களோ கூட்டம் போடவில்லை. தவெகதான் கூட்டம் போட்டது. எனவே அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். இல்லாத ஒரு விஷயத்தை நாங்கள் எப்படி பேச முடியும்" என்று அண்ணாமலை கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+