"டெல்லி வாங்க! பதவி தரோம்னு அமித் ஷா சொன்னார்! அதற்கு என்ன சொன்னேன் தெரியுமா" உடைத்து பேசிய அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையை பாஜகவின் பீ டீம் எ பலரும் விமர்சிக்கும் நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கமளித்துள்ளார். சென்னையில் நடந்த பேரணியில் பேசிய அவர், தன்னை டெல்லியில் வந்து பொறுப்பேற்கும்படி அமித் ஷா கூறியதாகவும் தான் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தமிழக மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்பதை அமித் ஷாவிடம் கூறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாஜகவின் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகும் கூட அவர் பாஜகவிலேயே பயணித்து வந்தார். இடையில் அவருக்கு பாஜகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல் பரவின. இந்தச் சூழலில் தான் அவர் பாஜகவில் இருந்து விலகி புதிதாக 'வீ த லீடர்ஸ்' (we the leaders) என்ற அமைப்பை தொடங்கினார்.

Annamalai BJP Amit Shah politics

அண்ணாமலை

இந்த அமைப்பு சார்பில் இப்போது மாநிலம் முழுக்க மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு இடங்களிலும் மாநாடுகளையும் நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக கோவை பொள்ளாச்சியில் மாநாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக அண்ணாமலை பாஜகவின் பீ டீம் என சொல்லப்படுவது குறித்தும் அவர் விளக்கமளித்தார். அதாவது அமித் ஷா தன்னை டெல்லியிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் இருப்பினும் அதை தான் மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "நான் அமித் ஷாவை சந்தித்து பேசியதால் என்னை பாஜகவின் பீ டீம் என்கிறார்கள்.. டெல்லியில் பொறுப்பெடுத்து 3 ஆண்டுகள் அங்கிரும்படி அமித் ஷா கூறினார்... நான் தான் வேண்டாம் என சொல்லிவிட்டேன். தமிழகத்திலேயே மக்கள் சேவை செய்து, அரசியல் செய்கிறேன் என அமித் ஷாவிடம் சொல்லிவிட்டேன்.

வீ த லீடர்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த 73 நாட்களில் மட்டும் 20 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இது மக்களுக்கான இயக்கம். மக்கள் தான் இதில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். டெல்லி, ஜார்ஜ் கோட்டை, பனையூர், போயர்ஸ் கோட்டையில் இருந்து முடிவெடுக்கும் காலம் எல்லாம் முடிந்துவிட்டது.

இளைஞர்கள்

நாட்டில் இப்போது 80 லட்சம் பேர் டெலிவரி செய்கிறார்கள்.. 2030ல் இந்த எண்ணிக்கை 2.5 கோடி பேராக உயர போவதாக கூறப்படுகிறது. இது பல நாடுகளின் மக்கள் தொகைக்கு இணையானது. இவர்களில் பலர் பட்டம் பெற்றவர்கள். அவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு வேலை ஏற்படுத்த வேண்டியது நமது பொறுப்பு.

வேலைவாய்ப்பு

இந்த டெலிவரி வேலையே கூட ஆபத்தில் தான் இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரோபோ மற்றும் டிரோன் மூலமான டெலிவரி ஆரம்பித்துவிட்டது. நமது நாட்டிலும் கூட 5 ஆண்டுகளில் இந்த ரோபோ டெலிவரி வந்துவிடும். அப்போது என்ன செய்ய முடியும்? இந்த இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இதை பேசுவதால் நாம் மத்திய அரசுக்கு எதிராக பேசுகிறோம் என இல்லை. நாம் இளைஞர்களுக்காக பேசுகிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+