"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி மீண்டும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர் டெல்லி செல்லவுள்ள நிலையில், பாஜக மேலிட தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கவனிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் அண்ணாமலை. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அவர், அந்தப் பணியை விட்டு விலகி 2020-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

அரசியலுக்கு வந்த சில மாதங்களிலேயே மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற அவர், பின்னர் தமிழக பாஜக தலைவராக உயர்ந்தார். அண்ணாமலையின் வருகைக்கு பிறகு பாஜக மீதான இளைஞர்களின் கவனம் அதிகரித்ததாக அக்கட்சியினர் கூறி வந்தனர்.
அண்ணாமலை
சமூக வலைதளங்கள் முதல் தெருமுனைக் கூட்டங்கள் வரை அவரது பேச்சுகள் பரவலாக பேசப்பட்டன. திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்த அவர், தமிழக பாஜகவின் முக்கிய முகமாக உருவெடுத்தார். ஆனால், அதிமுக - பாஜக உறவில் ஏற்பட்ட பிரச்சினைகள் அவரது அரசியல் பயணத்தில் சில சறுக்கல்களை ஏற்படுத்தியது. அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்தது, மாநில பாஜக மூத்த தலைவர்களுடனான முரண்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் அவர் மீது டெல்லி தலைமை அதிருப்தியில் இருந்தது.
பாஜக
பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவானபோது, கூட்டணியில் சிக்கல்கள் வரக்கூடாது என்ற காரணத்தால் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டது. அதன்பின் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். அப்போது அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.
பாஜக தலைவர்
மத்திய அரசில் பதவி அல்லது தேசிய அமைப்பில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால் ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் எந்தப் புதிய பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இதுவே அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. தேர்தல் பிரசாரங்களில் மட்டும் பங்கேற்று விட்டு அமைதியாக இருந்தார். இதுவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
பாஜக தலைமை
இதற்கிடையே சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக அமல்படுத்துவது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட கருத்து பாஜகவை பரபரப்புக்குள்ளாக்கியது. பாஜகவின் தேசிய நிலைப்பாட்டிலிருந்து சற்று மாறுபட்ட கருத்தாக அது பார்க்கப்பட்டதால், அண்ணாமலை தனித்த பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறாரா என்ற விவாதமும் எழுந்தது. அதே நேரத்தில், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியும் பல அரசியல் தலைவர்களுக்கு புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை புதிய கட்சி
குறிப்பாக இளைஞர்களின் ஆதரவுடன் புதிய கட்சி ஆட்சியை பிடிக்க முடியும் என்பதை சமீபத்திய அரசியல் சூழல் காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் அண்ணாமலையும் தனக்கென ஒரு அரசியல் பாதையை உருவாக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் உடனடியாக புதிய கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்றும், அதற்கு முன்பாக மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வீ தி லீடர்ஸ்
தற்போது அவர் நடத்தி வரும் "வி தி லீடர்ஸ்" ("We the Leaders) என்ற அமைப்பை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பை எதிர்கால அரசியல் இயக்கமாக மாற்றும் வாய்ப்பும் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்நிலையில் அண்ணாமலையின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜக மேலிட தலைவர்களுடன் நடைபெறும் சந்திப்பில் அண்ணாமலை முக்கிய முடிவுகள் குறித்து தலைமையிடம் பேசவுள்ளார்.
அமித் ஷா
இந்நிலையில், பாஜக அவரை விட தயாராக இல்லை. அவரை சமாதானப்படுத்த விரும்பும் அமித் ஷா, பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளாராம். இதனால், அவருக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படுமா, என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயணத்தின் மூலம் புதிய கட்சி குறித்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா? அல்லது அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறாரா? என்பதும் இந்த டெல்லி பயணத்திற்குப் பிறகு தெளிவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications