பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்திய அண்ணாமலையின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு வெளியான 20 மணி நேரங்களிலேயே சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களாக சேர முன்வந்துள்ளனர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதன்பிறகு அவருக்கு எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், அண்ணாமலை பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

Annamalai bjp amit shah

அண்ணாமலை

தனது ஆதரவாளர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் அவர் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் கடந்த வாரம் டெல்லி சென்ற அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

பாஜக

கடந்த நான்கு நாட்களாக டெல்லியிலேயே தங்கி இருந்த அண்ணாமலை, தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை கட்சித் தலைமையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இறுதியில் அவரது ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டார்.

அண்ணாமலை இயக்கம்

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை தனது புதிய அரசியல் பயணத்தை அறிவித்தார். டெல்லியில் இருந்தபடியே சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் பேசிய அவர், தற்போது தொடங்கப்படும் இந்த இயக்கம் எதிர்காலத்தில் முழுமையான அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்த இயக்கம் போட்டியிடும் என்றும் அவர் கூறினார். தற்போதைய அரசியல் நடைமுறைகளில் இருந்து வெளியே வந்து, சாதாரண மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேர்தல் அரசியல்

அரசியலில் புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கில் கோவையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்றும் அண்ணாமலை அறிவித்தார். இந்த மையத்தின் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய வேட்பாளர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த அறிவிப்பு வெளியாகிய உடனே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் புதிய அரசியல் பயணத்தை வரவேற்றனர்.

உறுப்பினர் சேர்க்கை

நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே, தனது புதிய இயக்கத்தில் பொதுமக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை அழைப்பு விடுத்தார். இதற்காக இணையதள பதிவு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆச்சரியமான வகையில், அறிவிப்பு வெளியான 20 மணி நேரத்திற்குள் சுமார் 12 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜினாமா

அதேநேரத்தில் அண்ணாமலையின் முடிவைத் தொடர்ந்து பாஜகவில் இருந்த அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து விலகத் தொடங்கியுள்ளனர். மாநில மற்றும் மாவட்ட அளவிலான பல முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து வருகின்றனர். இதனால் தமிழக பாஜகவில் புதிய அதிர்வுகள் உருவாகியுள்ளன. அண்ணாமலையின் புதிய இயக்கம் எதிர்காலத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும், அது முழுமையான அரசியல் கட்சியாக எப்போது மாறும் என்பதே தற்போது தமிழக அரசியலில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+