பாஜகவின் பவர் ஹவுஸ்..ரீ-என்ட்ரி கொடுக்கும் அண்ணாமலை! அமித்ஷா கொடுத்த சிக்னல்.. அடுத்த நாளே மீட்டிங்!
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததும், அதற்கு பிறகு அண்ணாமலையை சந்தித்ததும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொண்ட அதே நாளில் அண்ணாமலையும் டெல்லியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மீண்டும் அவர் தமிழக பாஜகவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாகச் சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதே நேரத்தில் அண்ணாமலையை வைத்து டெல்லி பாஜக வேறு திட்டங்களையும் கையில் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக - பாஜக கூட்டணியில் எவ்வித பிரச்சினையும் இல்லாதது போல் கடந்த சில வாரங்களாக அமைதியாக இருந்ததுபோல் தோன்றினாலும், உள்ளுக்குள் பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஓபிஎஸ்ஸின் டெல்லி பயணமும், அமித்ஷாவுடனான சந்திப்பு எடப்பாடியை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஓ. பன்னீர்செல்வமும், அண்ணாமலையும் இடம்பெறச் செய்த இரு திடீர் சந்திப்புகள் தமிழக அரசியலில் பேச்சு பொருளாக மாறியுள்ளது. இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இருப்பதாகச் சொல்கின்றனர் அதிமுகவினர்.

அதிமுக கூட்டணி
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்பு, ஓ. பன்னீர்செல்வம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் சில மாதங்கள் இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த மரியாதை, பொறுப்புகள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்தி கூட்டணியிலிருந்து விலகினார். அதன் பின் ஓபிஎஸ் தனி கட்சி தொடங்குவாரா, அல்லது தமிழக வெற்றிக்கழகத்துக்கு செல்வாரா என்னும் கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்தன. அதே நேரத்தில், அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று அவர் பலமுறை கூறியிருந்தார்.
ஓ. பன்னீர்செல்வம்
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசியதாக தகவல்கள் வந்தன. இதனுடன் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அண்ணாமலையும் அதே நேரத்தில் டெல்லியில் இருந்தது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த டெல்லி சந்திப்பு விவாதம் அடங்குவதற்குள், கோவையில் நடந்த ஒரு திருமண விழாவில் ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலை நேருக்கு நேர் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடிய காட்சி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித் ஷா
ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இல்லை, அண்ணாமலை தற்போது மாநில தலைவர் பொறுப்பில் இல்லை. இதனால் இருவரும் தனித் தனியாக பாஜக தலைமை விட்டு விலகும் நிலையில் இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால் இந்த திடீர் சந்திப்பு அதிமுக - பாஜகவின் பல மாற்றங்களுக்கு இட்டுச் செல்லலாம் என கூறப்படுகிறது. அண்ணாமலையின் நிலைமையும் தற்போது முக்கிய விவாதமாகியுள்ளது. மாநில தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, அவர் எந்தப் புதிய பொறுப்பும் ஏற்கவில்லை.
அண்ணாமலை
ஆனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்பதான தகவல்கள் பாஜக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலையை தேசிய அளவில் உயர்ந்த பதவிக்கு கொண்டு செல்லும் முயற்சி நடக்கிறது என்று கூட சொலப்படுகிறது. இந்நிலையில் தான் ஓபிஎஸ் - அண்ணாமலை சந்திப்பு இதே சூழலில் நடந்துள்ளதால், பாஜக தரப்பில் அவரை மீண்டும் கூட்டணிக்கு இழுத்து வர திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
ரீஎன்ட்ரி
அதேவேளை அதிமுகவை ஒரே அணியாகக் கொண்டு வர அமித் ஷா தீவிரமாக முயற்சி செய்கிறார் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. ஓபிஎஸ்-ஐ மீண்டும் என்.டி.ஏ-வில் இணைப்பது அந்த பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதுதான் தற்போதைய கணிப்பு. ஓபிஎஸ் -அமித் ஷா-அண்ணாமலை ஆகியோரது சந்திப்புகளை வைத்து பாஜக தமிழ்நாட்டில் அண்ணாமலையை ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருவதாகவே தெரிகிறது. வரவிருக்கும் நாட்களில் இன்னும் பல மாற்றங்கள் காத்திருக்கின்றன என்பதற்கான சிக்னலே இந்த சந்திப்புகள் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
-
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?











Click it and Unblock the Notifications