அண்ணாமலை ’பருப்பு’ வேகலையோ? பாஜகவே பரவாயில்லை! தாய்க் கட்சிக்கு ரிட்டர்ன் ஆகும் அண்ணனின் விழுதுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் தலைவர் அண்ணாமலை 'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கி இருக்கிறார். 50 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தால் தான் கட்சி ஆரம்பிப்பேன் என அவர் சொன்ன நிலையில், இன்னும் 20 லட்சத்தை கூட தாண்டவில்லை. இந்த நிலையில் அண்ணாமலையுடன் பயணித்தால் வேலைக்காகாது என மீண்டும் பாஜகவுக்கு திரும்பி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதை அடுத்து உற்சாகம் அடைந்திருக்கிறார் தமிழக பாஜகவின் தற்போதைய தலைவரான நயினார் நாகேந்திரன்.

தமிழகத்தின் கரூரில் பிறந்து, ஐஐஎம்-ல் படித்து கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, விருப்ப ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். இணைந்த உடனேயே அவருக்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கபட்டது.

Annamalai BJP Nainar Nagendran

பின்னர் குறுகிய இடைவெளியிலேயே 2021-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை. சட்டம்-ஒழுங்கு, ஊழல், அரசு நிர்வாகம் போன்ற பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழக பாஜக

இதற்கிடையே அதிமுகவையும் சேர்த்து அவர் விமர்சிக்க, அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கினார் அண்ணாமலை. ஆனால் அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியை உருவாக்கிய நிலையில் அண்ணாமலை பதவி விலக நேரிட்டது.

அண்ணாமலை

இதை அடுத்து கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் அண்ணாமலை என்ற பேச்சுகள் எழுந்தன. இதற்கிடையே டெல்லி சென்ற அண்ணாமலை கடந்த ஜூன் 5-ம் தேதி பாஜகவிலிருந்து விலகினார். அதே நாளில் "வீ தி லீடர்ஸ்" (இது நம்ம இயக்கம்) அமைப்பை தொடங்கிய அவர் உறுப்பினர் சேர்க்கையையும் ஆரம்பித்தார். அந்த அமைப்பு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சி

அதுமட்டுமல்லாமல் கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல அடிநிலைத் தொண்டர்களும் அண்ணாமலையுடன் இணைந்து வருகின்றனர். 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே அரசியல் கட்சியை அறிவிப்பேன் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார் அண்ணாமலை. ஆனால் அதில் தான் பெரிய சிக்கல் எழுந்திருக்கிறது. அண்ணாமலை அமைப்பை ஆரம்பித்து மூன்று மாதங்கள் முடிவடையப் போகும் நிலையில் இன்னும் அந்த எண்ணிக்கை 20 லட்சத்தை கூட தாண்டவில்லை.

மிஸ்டு கால்

தற்போதைய சூழ்நிலையில் 19 லட்சத்து 54 ஆயிரத்து 291 பேர் மட்டுமே அந்த அமைப்பில் இணைந்துள்ளனர். ஆன்லைன் மூலம் அந்த அமைப்பில் சேர்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருப்பதால்தான் இயக்கத்தில் ஆட்கள் சேர்க்கை குறைவாக இருப்பதாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இதனால் மிஸ்டு கால் மூலம் அமைப்பில் தொண்டர்களை சேர்க்கும் நடவடிக்கையும் தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில் அண்ணாமலைக்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழக அரசியலில் இல்லை என சொல்லப்படுகிறது.

நயினார் நாகேந்திரன்

இதை அடுத்து அண்ணாமலை ஆதரவாளர்களாக இருந்த பலரும் தற்போது மீண்டும் பாஜகவை நோக்கி நகர தொடங்கி இருக்கின்றனர். சில முக்கிய தலைவர்களிடம் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் அவர்கள் பாஜகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. விழுப்புரம் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் பாஜகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். மேலும் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான நிர்வாகிகளும் மீண்டும் பாஜக கதவை தட்டி வருகிறார்களாம்.

மீண்டும் பாஜக

இதனால் உற்சாகமடைந்திருக்கும் நயினார் தரப்பு மீண்டும் பாஜகவுக்கு வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவமும் அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பதவியும் தரப்படும் என சொல்லி இருக்கிறாராம். இதை அடுத்து அண்ணாமலை தரப்பில் இருந்து பாஜகவுக்கு வரும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர். இந்த தகவலால் அண்ணாமலையில் அதிர்ச்சியில் இருக்கிறார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+