திமுகவின் 2ஆவது ஊழல் பட்டியல் ரெடி.. கடந்த முறை அப்பா பேரு.. இந்த முறை மகன் பேரு.. அண்ணாமலை அதிரடி
சென்னை: திமுகவின் 2ஆவது ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர்கள் குறித்தும் திமுகவின் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் ஊழல் பட்டியலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அண்ணாமலை வெளியிட்டிருந்தார், முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மருமகன் சபரீசன், மகன் உதயநிதி, டி.ஆர்.பாலு, கனிமொழி, எ.வ.வேலு உள்ளிட்டோரின் பெயர்களை வெளியிட்டு அவர்களுக்கு இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அவையெல்லாம் எந்த ஊழலில் கிடைத்தது போன்றவற்றை அவர் ஆதாரத்துடன் விளக்கவில்லை. இதனால் திமுக சார்பில் அவர் மீது வழக்குத் தொடுக்கப்படும் என திமுக முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஒன்று ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும், இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும், நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என ஆர்.எஸ். பாரதி ரூ 500 கோடி கேட்டிருந்தார். அவருடைய நோட்டீஸுக்கு பதில் அளித்த அண்ணாமலை கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டார். இதை போல் உதயநிதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்,.
அவர்களும் ஆதாரத்தை வெளியிட வேண்டும் இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்டுவிட்டு கேட்கும் நஷ்ட ஈட்டை கட்ட வேண்டும் என்றனர். அவர்களுக்கும் மன்னிப்பு கேட்க முடியாது என கூறிவிட்டார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்றஉ செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் பால்வளத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆவடி நாசர் நீக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது ஏற்கெனவே நாங்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறோம். அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு பாராட்டுகள். புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் பால் கொள்முதல் விலையை உயர்த்தியும் ஆவின் பால் விலையை குறைத்தும் வழங்க வேண்டும். அதற்கு சிறப்பான நிர்வாக அனுபவம் தேவை. தொழில் துறை பொறுப்பை டிஆர்பி ராஜாவுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
அது ஏன் என தெரியவில்லை. அந்த குடும்பம்தான் 20 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்த துறையை வழங்கியுள்ளார்கள். என்ன ஐடியாவில் இதை வழங்கி இருக்கிறார்கள் என தெரியவில்லை. டி.ஆர்.பாலு தனது நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது, நாடாளுமன்ற அவை குறிப்பிலேயே இடம் பெற்றுள்ளது.
டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிகிறேன். இதனால் நான் பயந்துவிடப் போவதில்லை. இன்னும் உங்கள் மீதான குற்றச்சாட்டு அதிகமாகுமே தவிர குறையாது. நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மிக சிறப்பாக செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது மேடைகளிலேயே பாராட்டி இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரிடம் இருந்து நிதித்துறையை மாற்றுவதற்கு என்ன காரணம்?
பிடிஆர் ஆடியோ விவகாரத்திற்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது. அது அவருடைய தவறல்ல. இப்போதும் நான் சவால் விடுகிறேன். அந்த ஆடியோவில் நான் முதல்வரையும்தான் குற்றம்சாட்டியுள்ளேன். இதற்கும் என் மீது வழக்கு போட்டால் சந்திப்பேன். கோர்ட்டே அந்த ஆடியோவை ஆய்வு செய்யட்டும். தவறு செய்தவர்களை பேசியதால் பிடிஆரை பகடைக்காயாக்கக் கூடாது.
அன்று கருணாநிதி பாஜக எங்கே இருக்கிறது என கேட்டிருந்தார். இன்று 1461 கோடி கேட்கும் அளவுக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம். உங்களை கேள்வி கேட்கும் அளவுக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம். திமுகவின் 2ஆவது ஊழல் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஏற்கெனவே வெளியிட்ட பட்டியலில் 11 பேர் பெயர் இடம்பெற்றிருந்தது. தற்போது வெளியாகும் பட்டியலில் புதிய அமைச்சர் உள்பட 21 பேர் பட்டியல் இருக்கும் என்றார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக












Click it and Unblock the Notifications