ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே! என்டிஏ திமுகவுக்கு இடையில மட்டும் தான்! அடித்து சொன்ன அண்ணாமலை
தஞ்சாவூர்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி - திமுக இடையேயான இருமுனைப் போட்டியே நிலவுகிறது எனவும், விஜய் கொடுத்திருக்கும் மொத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற சுமார் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டே 4.50 லட்சம் கோடிதான் எனக் கூறியிருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," விஜய் கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை ஒருவர் கணக்குப் போட்டுச் சொல்லியிருந்தார். விஜய் கொடுத்திருக்கும் மொத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற சுமார் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.

தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டே 4.50 லட்சம் கோடிதான். தமிழக வெற்றிக் கழகம் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் பட்ஜெட்டைத் தாண்டி இருக்கிறது. இதையெல்லாம் மக்கள் சிந்தித்து பார்க்கின்றனர்.
விஜய்யை பொருத்தவரை, அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்களிடம் ஈர்ப்பு இருக்கிறது. நல்ல வாக்குகளைச் சில இடங்களில் வாங்குவார், அதை நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், தேர்தல் களம் கடந்த இரண்டு வாரங்களாக 'இருமுனைப் போட்டி'யாகத்தான் இருக்கிறது. விஜய்யின் வருகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது என்பது என் கணிப்பு.
தேவாலயத்திற்கு வருகிறவர்களுக்கு வெளியே நின்று நோட்டீஸ் கொடுக்கிறார்கள். மதத்தை பின்பற்றக்கூடிய இடங்கள் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எல்லோரும் கோயிலுக்குப் போகலாம், பிடித்தவர்கள் சர்ச்சுக்கு போகலாம், மசூதிக்கு போகலாம், அதில் எந்தத் தவறும் கிடையாது. அதேபோல பாதிரியாருக்குப் பிடிக்கும் என்பதால் அவர் முதலமைச்சரைப் போய் பார்ப்பது அவரது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால், சர்ச்சுக்கு வெளியேயோ அல்லது மசூதிக்கு வெளியேயோ நின்று ஒரு வேட்பாளருக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்துச் செயல்படுவது கண்டிப்பாக அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானதுதான். தமிழக மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொகுதி வரையறை மசோதா குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய கீழ்மட்ட தொண்டர்களுக்கும், நடுவில் இருக்கக்கூடிய தலைவர்களுக்கும் புரிதல் இல்லை என்றார் அண்ணாமலை" என்றார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications