டென்ஷனுடன் பிரஸ்மீட்; பெட்ரோல் ஒரு பேரல் விலை ஜஸ்ட் 84 ரூபாயாம்! அண்ணாமலை கொடுத்த ஷாக்;
சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஒரு பேரல் பெட்ரோலை 84 ரூபாய்க்கு இந்தியா வாங்குவதாக அண்ணாமலை கூறிய தகவல் அதைக் கேட்டவர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்திருக்கிறது.
ஏதோ ஒரு டென்ஷனில் டாலர் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்த மறந்தது பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அடித்தளம் அமைத்தவரே பொருளாதார மேதை சிதம்பரம் தான் எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, அவர் அது குறித்து பேச துளியும் உரிமையில்லை என சாடியிருக்கிறார்.

பிரஸ்மீட்
பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து ஒரு பேரல் பெட்ரோலை இந்தியா 84 ரூபாய்க்கு வாங்குவதாகவும் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பேரல் பெட்ரோல் விலை 84 ரூபாய் என சர்வதேச அளவில் விலை உயர்ந்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்ட செய்தியாளர்களுக்கும், அவரது பேட்டியை ஊடகங்களில் பார்த்தவர்களுக்கும் இது பெரிய ஷாக்கை கொடுக்கும் வகையில் இருந்திருக்கிறது.

வாங்கப்படுவதாக
ஒரு லிட்டர் பெட்ரோலே 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் ஒரு பேரல் பெட்ரோல் எப்படி 84 ரூபாய்க்கு வாங்கப்படுவதாக அண்ணாமலை கூறுகிறார் என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து ஏதோ ஒரு டென்ஷனில் டாலர் என்று குறிப்பிடுவதற்கு பதில் ரூபாய் என்று அண்ணாமலை குறிப்பிட்டுவிட்டார் என்றும் இது பெரிதுபடுத்த வேண்டிய விவகாரம் இல்லை எனவும் விளக்கம் தரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீம்ஸ்கள்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் இதேபோல் பலமுறை டங் ஸ்லிப் ஆகி பேசியதும், அவரது பேச்சை சமூகவலைதளங்களில் பதிவிட்டு மீம்ஸ் போட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்போது அண்ணாமலையின் இந்த பிரஸ்மீட் காட்சிகளை பதிவிட்டு எந்த ஊரில் ஒரு பேரல் பெட்ரோல் 84 ரூபாய்க்கு விற்கிறது எனக் கேட்டு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் விமர்சித்து வருகின்றனர்.

டென்ஷன்
ப.சிதம்பரத்தால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக அவர் கூறிய கருத்தும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியை விட்டு இறங்கி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சிதம்பரம் தான் காரணம் என அண்ணாமலை கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கேப்டன் விஜயகாந்தை போல் அவ்வப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை டென்ஷன் ஆவதும் கைவிடப்பட வேண்டிய ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications