துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போறாருனு பாஜக பார்க்குதா? அதை பிஏ சேகர்பாபுவிடம் கேளுங்கள்! அண்ணாமலை
சென்னை: துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை கவனிப்பது பாஜகவின் வேலை அல்ல, அது அமைச்சர் சேகர்பாபுவின் வேலை என முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
சென்னை பனையூர் அருகே அண்ணாமலையின் வீட்டருகே 50 அடி உயர பாஜக கொடிக் கம்பம் வைக்கப்பட்டிருந்தது. இது காவல் துறை அனுமதியின்றி நடப்பட்டதாக தெரிகிறது. மேலும் இதன் மேல் ஆபத்தான வகையில் உயர் மின் அழுத்த கம்பி செல்கிறது.

இதனால் அந்த கம்பத்தை அகற்றியதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் இதை தடுக்க அங்கு ஏராளமான பாஜகவினர் கூடினர். இதனால் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பாஜக தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்ற அவர் பழம், இனிப்பு, சாக்லேட் உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றார்.
இந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கொடிக் கம்பத்தை அகற்றினால் எங்கள் வளர்ச்சியை அடக்கி விடலாம் என திமுக நினைக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைப்பது போல் உள்ளது. திமுகவை ஆரம்பித்த போது ஐம்பெரும் கொள்கைகள்தான் பேசப்பட்டன.
ஆனால் இன்று அந்த கொள்கைகள் எத்தனை பேருக்கு மனப்பாடமாக தெரியும். இன்று திமுக ஒரு கார்பரேட் கட்சியாகிவிட்டது. திமுக அவர்களுடைய ஐம்பெரும் கொள்கைகளில் இருந்து எப்படி மாறுபட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். கோபாலபுரத்தில் இருக்கக் கூடிய சிங்கிள் கம்பெனியாகும். உள்ளே வெளியே ஆட்டத்தை எல்லாம் அவர்கள்தான் ஆடுவார்கள்.
பாஜகவை பொருத்தவரை தெளிவாக இருக்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகள் நாங்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க போகிறோம். அது போல் 30 மாதங்களில் திமுக செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கட்டும். இதை சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாம் என திமுக எஸ்கேப் ஆகிறது. இதை நீட் தேர்தலாகவே வைத்துக் கொள்ளலாம்.
அதாவது சிமுகவுக்கும் தெரியும் நீட்டை ஒழிக்க முடியாதுனு, எனக்கும் தெரியும். நீட்டை ஒழிக்க முடியாது. மக்களுக்கும் தெரியும், நீட் என்பது ஒழிக்க முடியாத ஒன்று , அது மட்டுமல்லாமல் நீட்டை எல்லாருமே வரவேற்கத் தொடங்கிவிட்டார்கள். அப்படியிருக்கும் போது நீட்டை எப்படி ஒழிக்க முடியும்.
என்னை பொருத்தமட்டில் திமுகதான் உள்ளே வெளியே ஆட்டம் ஆடி வருகிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் பார்க்கலாம் யார் உள்ளே வெளியே ஆட்டம் ஆடுகிறார்கள் என்று! துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பது பாஜகவின் வேலை அல்ல, அமைச்சர் சேகர் பாபுவின் வேலை. அவர்தான் துர்கா ஸ்டாலினின் பிஏ.
துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார் என்பதை பார்த்து அந்த கோயிலின் அறநிலைய துறை அதிகாரிக்கு அலர்ட் கொடுத்து அவருக்கு தேவையான மாலை மரியாதைகளை செய்ய சொல்வது, அங்கிருந்து வேறு வேறு கோயில்களுக்கு அழைத்து செல்வது என இதெல்லாம் பாஜக செய்யவில்லை, சேகர்பாபுதான் செய்கிறார்.
அமைச்சர் சேகர்பாபுவை இந்து அறநிலையத் துறை அமைச்சராக முதல்வர் நியமித்ததற்கு காரணமே ஃபுல் டைம் துர்காவின் பிஏ, பார்ட் டைம் அமைச்சராக பணியாற்றுவதற்காகத்தானே. அதனால் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் சேகர் பாபுவிடம்தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும். நீங்கள் ஏன் கண்காணிக்கிறீர்கள் என எங்களை கேட்க முடியாது என அண்ணாமலை பேசினார்.
சென்னையில் ஐடி விங் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பதுதான் பாஜகவினரின் ஒரே வேலையாக உள்ளது. அங்கே சென்று போட்டோ எடுத்துவிட்டு, இதோ பார்த்தீர்களா கோயிலுக்கு போகிறார் என பரப்புவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கோயிலுக்கும்தான் என் மனைவி செல்கிறார். அது அவருடைய விருப்பம். அதை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications