அண்ணா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. அண்ணாமலை தடாலடி.. பரிதாப அதிமுக!
சென்னை: அதிமுக - பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்காக முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.
அண்ணா குறித்து பேசியதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வரும் நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என பொருள்படும்படியாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஜெயலலிதாவை பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என தெரிவித்திருந்தனர். இதனால் அதிமுக- பாஜக இடையே கூட்டணி நீடிக்குமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்காக டெல்லி சென்ற எடப்பாடிக்கு பிரதமருக்கு பக்கத்தில் அமரும்படியான வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அதிமுக - பாஜக இடையே இருந்த பகைமை சிறிது அணைந்திருந்தது. இந்த நிலையில் என் மண் என் மக்கள் எனும் நிகழ்ச்சியில் ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 11 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் அண்ணாமலை அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அப்போது அவர் பேசுகையில், 1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் 10 நாட்கள் ஒரு தமிழ் மாநாட்டின் 4ஆம் நாளன்று அழைக்கப்படாத நிலையில் அங்கு வந்த அண்ணாதுரை பார்வதி தேவியை விமர்சித்திருந்தார். அடுத்த நாள் மேடைக்கு வந்த முத்துராமலிங்கத் தேவர், சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து பார்வதி தேவியை பேசியது யார் என கேள்வி எழுப்பினார்.
எல்லாரும் நெளிந்தனர். அண்ணாதுரையை மதுரையில் ஒளித்து வைத்திருந்தார்கள். அவரால் வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு இதுவரை பாலில்தான் அபிஷேகம் நடந்திருக்கிறது. மீண்டும் ஒரு முறை பார்வதி தேவி குறித்து கடவுளை நம்ப மறுப்போர் பேசினால் ரத்த அபிஷேகம் நடக்கும் என கூறியிருந்தார். இதையடுத்து முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தார் அண்ணாதுரை. இவ்வாறு அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலை அண்ணாதுரையை விமர்சித்திருந்த நிலையில் அவருக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அண்ணா குறித்து தவறாக உண்மைக்கு புறம்பாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெயக்குமார் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கு அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அண்ணா குறித்து நான் கூறிய கருத்துகள் உண்மை. அதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி அதுமாக பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைத்தது.
இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில் ஜெயலலிதா, அண்ணா உள்ளிட்டோரை அண்ணாமலை தொடர்ந்து தவறாக பேசி வருகிறார். ஏற்கெனவே ஜெயலலிதாவை பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். தற்போது மீண்டும் அண்ணாவை பற்றி பேசியுள்ளார். எங்கள் முன்னோடிகளை இப்படி பேசினால் எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
அதனால் அதிமுக- பாஜக இடையே கூட்டணி இப்போது இல்லை என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இது கட்சியின் முடிவு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால் பாஜகவினரும் சரி அதிமுகவினரும் சரி வெடி வைத்து கொண்டாடினர். இந்த நிலையில் அதிமுக- பாஜக ஆகிய இரு கட்சிகளின் நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர்.
இந்தநிலையில் திடீர் பல்டியாக அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அண்ணாமலையும் அதே கருத்தையே தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறுகையில் அண்ணா குறித்து நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications