ரூ 2000 என்கிட்ட கூட இல்லை.. நான் பேங்கிற்கு மாற்ற செல்லத் தேவையில்லை.. அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2000 ரூபாய் நோட்டு என்னிடமும் இல்லை, நடுத்தர மனிதரிடமும் இல்லை. பேங்க் வாசலில் யாருமே போயிட்டு நிற்கலை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் கூற்றுபடி 100 ரூபாய் நோட்டுகளில் 10 ரூபாய்கள் தான் ரூ 2000, மீதமுள்ள 90 நோட்டுகள் மற்ற டினோமினேஷன்கள். 2018 இல் புழக்கத்தில் இருந்த 100 நோட்டுகளில் 36 நோட்டுகள் மட்டுமே ரூ 2000 நோட்டுகளாகும்.

Annamalai says that no commom people stand to change Rs 2000

இன்றைய தினம் ரூ 2000 புழக்கத்தில் இல்லை. இதை வைத்திருப்பவர்கள் பதுக்கி வைத்திருக்க வேண்டும். லஞ்சம் வாங்கியவர்கள், அரசியல்வாதிகள், அந்த பணத்தை கட்டுகட்டாக குடோன்களில் வைத்திருப்போர்கள் உள்ளிட்டோருக்கு பிரச்சினை வரத்தான் போகிறது.

அதனால்தான் நிதியமைச்சரிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளோம். அதாவது டாஸ்மாக், கூட்டுறவு சொசைட்டிகள், மின்சார கட்டணம் கட்டும் இடத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு காரணம் இந்த 3 இடத்தில்தான் ஒரே அமைச்சர் இருக்கிறார். பிரச்சினை அவருக்குத்தானே ஒழிய சாமானிய மக்களுக்கு இல்லை.

எங்காவது வங்கி வாசலில் வரிசையாக மக்கள் நின்றிருப்பதை கண்டீர்களா. வங்கி வாசலில் நடுத்தர மக்கள் யாராவது ரூ 2000 காசை மாற்ற வந்திருக்கிறார்களா என்றால் யாருமில்லை. என்னை உள்ட யாருமே வங்கிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. வங்கிகளில் ஒரு நாளைக்கு ரூ 20000 மதிப்பிலான ரூ 2000 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும்.

Annamalai says that no commom people stand to change Rs 2000

கேஒய்சி இல்லாமல் வங்கியில் ரூ 2000 நோட்டுகளை மாற்ற முடியாது. இதை கருத்தில் கொள்ள வேண்டும் என நாங்கள் எடுத்துச் சொல்லியுள்ளோம். இது ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை. கர்நாடகாவில் 1985 க்கு பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட வரலாறு இல்லை, ஆனால் அந்த வரலாற்றை நாங்கள் மாற்ற முயன்றோம்.

அது முடியவில்லை. மக்கள் இந்த முறை எதிர்க்கட்சிதான் வேண்டும் என வாக்களித்துள்ளார்கள். தேர்தல் வாக்குறுதிகளாக ஒன்றை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் அதில் மாற்றங்களை செய்துள்ளது. வேலையில்லாதவர்களுக்கு மாதம் இத்தனை ஆயிரம் ரூபாய் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தனர். ஆனால் 2022 இல் முடித்தவர்களுக்கு மட்டும்தான் என கூறிவிட்டார்கள்.

Annamalai says that no commom people stand to change Rs 2000

அது போல் எல்லாரும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என சொல்லிவிட்டு தற்போது யார் 200 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு 200 யூனிட் இலவசம் என்கிறார்கள். எனவே இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன சொல்லியிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பது மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முதல் 5 தேர்தல் வாக்குறுதிகளை செய்ய தேவையான ரூ 50 ஆயிரம் கோடி நிதி எங்கே என பத்திரிகையாளர்கள் முதல்வர் சித்தராமையாவிடம் கேட்ட போது அதற்கு அவர் சொன்னது, பட்ஜெட் நன்றாக இருக்கிறது என்றார். பட்ஜெட் நன்றாக இருக்கிறது என்றால் பாஜக கடந்த மூன்றரை ஆண்டுகளாக நன்றாக ஆட்சி நடத்தியது என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சி சொன்னது எதையும் செய்ய மாட்டார்கள். எனவே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என அண்ணாமலை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+