இதனால் தான் மோடி ஓர் உலகத் தலைவர்.. உதயநிதி ஸ்டாலின் போட்டோவை பகிர்ந்து அண்ணாமலை சொன்ன வார்த்தை!
சென்னை: தன்னைப் பற்றி பொய்களை மட்டுமே பரப்பும் திமுகவைச் சேர்ந்தவர்களையும் சந்திக்கும் அளவுக்கு அவர் அன்பானவராக இருக்கிறார் பிரதமர் மோடி, அதனால்தான் அவர் ஒரு உலகத் தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு தலைநகர் டெல்லி சென்றார். உதயநிதி ஸ்டாலினுடன், விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர்.

இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு கொடுத்திருந்தார் பிரதமர் மோடி. விழாவுக்கு அழைப்பதற்காக அவரிடம் நேரம் கேட்டிருந்தேன். ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க சென்னைக்கு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சமூக வலைதள பக்கத்தில், பிரதமர் மோடி உடனான சந்திப்பு புகைப்படங்களை பதிவிட்டு, பிரதமரை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, பிரதமர் மோடி இதனால் தான் முன்மாதிரியான அரசியல் தலைவராக இருக்கிறார் எனக் கூறியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
Hon PM Thiru @narendramodi avl has always had the best regard for TN, spread the beauty of the Tamil language like never before, has delivered exceedingly more to TN than his predecessors and has been kind enough to meet people from DMK who have nothing but spread only lies about… pic.twitter.com/T76ZBoij8E
— K.Annamalai (@annamalai_k) January 4, 2024
அண்ணாமலை தனது பதிவில், "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாடு மீது எப்பொழுதும் சிறந்த மரியாதை கொண்டவர், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் மொழியின் அழகை உலகெங்கும் பரப்பினார். மற்ற எல்லா பிரதமர்களையும் விட அதிகமாக தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளார். தன்னைப் பற்றிய பொய்களை மட்டுமே பரப்பும் திமுகவைச் சேர்ந்த மக்களைச் சந்திக்கும் அளவுக்கு அவர் அன்பாக இருக்கிறார். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி ஒரு உலகத் தலைவர் மற்றும் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி" எனத் தெரிவித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications