"பிரேமலதா உடலில் கேப்டன் விஜயகாந்த் ஆவி புகுந்துவிட்டது.. அதனால்தான் இப்படி..” அண்ணாமலை பேச்சு!
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் உடலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஆவி புகுந்துவிட்டதாகவும், அதனால்தான் திமுக ஆட்சியில் நடக்கும் வன்கொடுமைகளை அவர் பிரச்சாரக் கூட்டத்திலேயே தைரியமாகப் பேசினார் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறித்து கிண்டலாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். பிரேமலதாவின் உடலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஆவி புகுந்துவிட்டதாகவும், அதனால்தான் திமுக ஆட்சியில் நடக்கும் வன்கொடுமைகளை அவர் சேலம் கூட்டத்திலேயே தைரியமாகப் பேசினார் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "திமுக கூட்டணி தற்போது உடைந்துபோன தேங்காயைப் போலச் சிதறிக் கிடக்கிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்தத் திமுக கூட்டணிக்கு மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம். ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவில்லை. ராகுல் வடக்கே, ஸ்டாலின் தெற்கே பிரச்சாரம் செய்தனர்.
பிரேமலதா விஜயகாந்த்தைப் பாராட்ட வேண்டும். அவர் அவ்வப்போது உண்மையைப் பேசுகிறார். முதல்வர் முன்னிலையில் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையும், போதை கலாசாரமும் இருக்கின்றன எனப் பேசியதை வரவேற்கிறோம். திமுக ஆட்சிக்கு எதிராகப் பிரேமலதா பேசும் உண்மைகள் அனைத்தும் விஜயகாந்த்தின் ஆன்மா கொடுத்த தைரியம்." என அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழகத்தில் எங்கும் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம், இதை தவிர அண்ணன் ஸ்டாலின் மீது வேறு என்ன குற்றச்சாட்டு வைக்க முடியும்? இந்த ஆட்சியைப் பற்றி வேறு எந்த குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது என திமுக பிரச்சார மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தான் பிரேமலதா பேச்சை விமர்சித்து அண்ணாமலை பேசியுள்ளார்.
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை












Click it and Unblock the Notifications